புனித ஜான் போஸ்கோ

149. மரியாயின் வழியாக அன்றி, இயேசுவை அடைவது ஏறக்குறைய இயலாத காரியம்.

150. மாமரியே எல்லாவற்றையும் செய்தார்கள்.

151. என் வேலையயல்லாம் நம் திவ்ய இராக்கினியின் உதவியை மன்றாடி, ஓர் எளிமையான அருள்நிறை மந்திரத்துடன் தொடங்கியது.

152. மாமரிக்கு முற்றிலும் சொந்தமாயிரு; அவர்களிடம் பக்தி கொண்டுள்ளவர்களை நேசி -- வணக்கத்துக்குரிய மம்மா மார்கரெட் (புனிதரின் தாய்) புனித ஜான் போஸ்கோவிடம் கூறியது.

153. நீ உன் பள்ளிப் படிப்பைத் தொடங்கியபோது, நான் ஏறக்குறைய தனிப்பட்ட முறையில் நம் திவ்ய இராக்கினியிடம் உன்னை ஒப்புக்கொடுத்தேன். இப்போது, அவர்களுக்கே நீ முற்றிலும் சொந்தமாயிருக்கும்படி உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களை நேசிப்பவர்களை நீ நேசி, என்றாவது ஒரு நாள் நீ ஒரு குருவானால், இந்த நல்ல தாயாரின் மீதான பக்தியை இடைவிடாமல் பரப்பு -- வணக்கத்துக்குரிய மம்மா மார்கரெட் புனித ஜான் போஸ்கோவிடம் கூறியது.

154. பூமியின் மீது காலூன்றி நட, ஆனால் உன் இருதயத்தில், மோட்சத்தில் இரு.

155. கேள், பசாசு அஞ்சி நடுங்குகிற இரண்டு காரியங்கள் இருக்கின்றன. அவை: பக்தி யுருக்கத்தோடு திவ்ய நன்மைகள் உட்கொள்வது, மற்றும் அடிக்கடி திவ்ய நற்கருணை சந்திப்பது ஆகியவையாகும்.

156. ஓடு, குதி, சத்தம் போடு, ஆனால் பாவம் செய்யாதே.

157. ஒரு நல்ல கத்தோலிக்கப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் வரக்கூடிய நன்மையைக் கடவுள் ஒருவரே அறிவார்.

158. தாழ்ச்சியும் பொறுமையும் உள்ளவர்களாயிருகங்கள், ஆண்டவராகிய இயேசு சித்தத்தையும், அதை நிறைவேற்றுவதற்கான வழிகளையும் உங்களுக்குத் தருவார்.

159. நம் விசுவாசத்தை மறுதலிப்பதற்குப் பதிலாக, அல்லது எந்த விதத்திலும் சாவான பாவம் ஒன்றைச் செய்வதற்குப் பதிலாக, சாகவும் நாம் சித்தமாயிருக்க வேண்டும்.

160. சோதிக்கப்படும்போது, உன் காவல் தூதரை மன்றாடு, உதவியைப் பெற்றுக் கொள்ள நீ எவ்வளவு ஆர்வத்தோடு இருக்கிறாயோ, அதை விட அதிகமாக, உனக்கு உதவி செய்ய அவர் அதிக ஆர்வத்தோடு இருக்கிறார். பசாசை அலட்சியம் செய், அவனுக்கு பயப்படாதே; உன் காவல் தூதரைக் கண்டு அவன் நடுங்கிப் பதுங்கி, பறந்தோடிப் போகிறான்.

161. உன் இறுதி கணங்களில் உனக்கு ஆறுதலளித்து, உனக்கு ஒத்தாசை செய்யும்படி உன் தூதரிடம் கேள்.

162. இன்னும் நேரமிருக்கும்போதே நன்மை செய்.

163. பிரச்சினைகளை மூடி மறைப்பது அவற்றைத் தீர்க்க உதவாது.

164. நான் சொல்வதை நம்புங்கள்… கடவுளோடு சமாதானமாக இல்லாவிடில் எந்த மனிதனும் இவ்வுலகில் உண்மையில் மகிழ்ச்சியாகவே இருக்க முடியாது.

165. பீடத்தின் பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் இருக்கும் இயேசுவை அடிக்கடி சந்திக்கச் செல், அப்போது பசாசு உனக்கு எதிராக சக்தியற்றவனாக இருப்பான்.

166. மற்றவர்களுக்கு எல்லாவற்றையும் மன்னித்து விடு, உனக்கு எதையும் மன்னிக்காதே.