புனித ஃபாஸ்டினா

144. தாழ்ச்சியுள்ள ஆத்துமம் தன்னையே நம்புவதில்லை, மாறாக, அது தன் நம்பிக்கையை யயல்லாம் கடவுளில் வைக்கிறது.

145. என் ஆன்மாவின் உட்புறம், கடவுளும் நானும் வாழும் ஓர் அதியற்புத உலகத்தைப் போன்றது.

146. துன்புறுதல் ஒரு பெரிய வரப்பிரசாதம்; துன்பத்தின் வழியாக ஆன்மா தனது திவ்ய இரட்சகரைப் போலாகிறது, துன்பத்தில் நேசம் திடப்படுத்தப்படுகிறது; துன்பம் எவ்வளவு அதிகமாகிறதோ, அவ்வளவுக்கு நேசம் பரிசுத்தமானதாகிறது.

147. கடவுளை நேசிப்பதிலும், தாழ்ச்சியிலுமே ஆன்மாவின் மேன்மை இருக்கிறது.

148. மிகுந்த அன்பு சிறிய காரியங்களைப் பெரிய காரியங்களாக மாற்ற முடியும், நேசம் மட்டுமே நம் செயல்பாடுகளுக்கு மதிப்பைத் தருகிறது.