புனித டோமினிக் சாவியோ

167. பெரிய காரியங்களைச் செய்ய என்னால் முடியாது, ஆனால் கடவுளின் அதிமிக மகிமைக்காக எல்லாவற்றையும், மிகச் சிறிய காரியங்களையும் கூட செய்ய நான் விரும்புகிறேன்.

168. நான் ஒரு புனிதன் ஆகவில்லை என்றால், நான் எதுவுமே செய்யவில்லை.

169. உங்களை ஒரு புனிதனாக்கும்படி இயேசுவிடம் கேளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒருவர் மட்டுமே அதைச் செய்ய முடியும், ஒழுங்காக (அடிக்கடி) பாவசங்கீர்த்தனம் செய்து, உங்களால் முடிந்த வரை அடிக்கடி திவ்ய நன்மை உட்கொள்ளுங்கள்.

170. ஒரே ஒரு ஆன்மாவை மட்டுமே இரட்சிப்பதில் நான் வெற்றி பெறுவேன் என்றாலும் கூட, நான் என் சொந்த ஆன்மா காப்பாற்றப்படுவது பற்றி உறுதியாயிருப்பேன்.

171. மரியாயே, நான் என் இருதயத்தை உமக்குத் தருகிறேன். அதை எப்போதும் உம்முடையதாக வைத்துக் கொள்ளும். இயேசு, மரியாயே, எப்போதும் என் நண்பர்களாக இருங்கள். நான் உங்களை மன்றாடுகிறேன், ஒரே ஒரு பாவத்தைக் கட்டிக் கொள்ளும் துர்ப்பாக்கியத்திற்கு உட்படுவதை விட, இறந்து விட என்னை அனுமதியுங்கள். 

172. நல்ல வெகுமதி தரும் எஜமானருக்காக, தம் மீதுள்ள அன்பின் நிமித்தமாகத் தரப்படும் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீரூக்கும் கூட வெகுமதி தரும் ஓர் எஜமானருக்காக, வேலை செய்யும்போது, எதுவும் களைப்பூட்டுவதாகவோ, வேதனையானதாகவோ தோன்று வதில்லை.

173. பசாசு உன்னை அழைக்கும்போதெல்லாம், நீ ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை அவன் காணும்படி, எப்போதும் எதிலாவது ஈடுபட்டிரு.

174. வேதாகமத்தை அறியாதிருப்பது கிறீஸ்துவை அறியாதிருப்பதாகும்.

175. நல்லது, மிக நல்லது, அனைத்திலும் நல்லது. உன் நல்லது மிக நல்லதாகவும், உன் மிக நல்லது, அனைத்திலும் நல்லதாகவும் ஆகும் வரை, அதை ஒருபோதும் ஓய்வெடுக்க விடாதே.

176. இரவில் தனியாக உறங்க பயப்படுபவர்களுக்குத் திருமணம் நல்லது.

177. கன்னிமை ஒரு நினைவால் இழக்கப்படக் கூடும்.

178. நீ போதிப்பதை ஏன் அனுசரிப்பதில்லை?