இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால் யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர், மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். திருப்பாடல்கள் 130:3-4

இறைவா நாங்கள் உம்மையே நம்பியிருக்கின்றோம், பாவிகளாகிய எங்களை நீர் மன்னிக்க கூடியவர். எங்கள் பாவங்களை அனைத்தையும் விட்டு மனம் மாற அழைப்பதற்கு நன்றி இறைவா.

இறைமகனான இயேசுவே உன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்காக தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று செபித்தது போல் எங்களுக்கும் உமது ஆழ்ந்த அமைதியான அருள் நிறைந்த உமது தைரியத்தையும் வலிமையையும் துன்பங்களை ஏற்கும் போது எங்களுக்குத் தந்தருளும். 

இன்று மற்றவர்கள் நம்மீது குற்றம் சுமத்தியால் பொறுமையோடு ஏற்று, அமைதியோடு இறைமகன் இயேசு சிலுவையில் செபித்த செபத்தை தியானித்து பலமுறை செபித்து இறைவனிடம் மன்னிப்பு கேட்போம். அமைதியின் இறைவா இன்று அமைதியோடு பயணிக்க அருள் தாரும். ஆமென்