தவக்காலம் எம்முடைய மனமாற்றத்தின் காலம்

 


🌹தவக்காலம் எம்முடைய மனமாற்றத்தின் காலம் வருடத்தில் இந்த நாற்பது நாட்கள் இறைவன் எமக்குத் தருகின்ற அருளின் காலம் எம்மைப் பற்றியும் எம்முடைய வாழ்வைப் பற்றியும் ஆராய்ந்து பார்க்கும் காலம்.

🌹நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டாம் இதயத்தைக் கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.    [யோவேல் 2:13] ஆனால் பலர் சந்தர்ப்பவாதிகளாக தங்கள் தேவைக்காக மட்டும் கடவுளைத் தேடுவது வேதனைக்குரிய விடயமாகும்.

🌹நாம் உண்ணா நோன்பு இருக்கின்றோம் என்பதைக் காட்டவோ அல்லது அடுத்தவர்களுக்கு நாம் பக்தியானவர் என்பதைக் காட்டவோ நமக்கு இவ்வருளின் காலம் தரப்படவில்லை அப்படி நாம் செய்தால் நாமும் பரிசேயர்கள் தான் வெளிவேடக்காரர்கள் தான்.

🌹நான் பாவி ஆண்டவரே என்னுடைய பாவங்களை மன்னியும் நீர் எனக்காக என்னுடைய பாவத்திற்காக மரித்தீர் ஆனால் நான் உம்முடைய பிள்ளையாக வாழ பல தடவைகளில் தவறிவிட்டேன் என்று என்னையே தாழ்த்திக் கொண்டு கடவுளிடம் மன்னிப்புக் கேட்கும் காலம் இத் தவக்காலம்.

🌹இயேசு சாவுக்கு சாவு மணி அடித்த காலம் தவக்காலம், அலகையை வென்ற காலம் தவக்காலம் மனுக்குலத்திற்கு மீட்பை தந்த காலம் தவக்காலம். ஆகவே எம்மை ஆராய்ந்து பார்த்து எமக்குள் உள்ள தீயவற்றைக் களையவும் எம்முடைய வாழ்வைப் புதுப்பிக்கவும் இறைவன் தரும் அருளின் காலத்தை பயன்படுத்துவோம் அனைவருடனும் அன்பினைப் பகிர்ந்து வாழ்வோம்.

🌹என் மீது கொண்ட அன்பினால் எனக்காக அடி வாங்கியவர், சிலுவை சுமந்தவர், இரத்தம் சிந்தினவர், தன்னுயிரையே தந்தவர் நான் அவருக்காக என்ன செய்தேன்? என்ன செய்வேன்? ஆண்டவருக்காக வாழ்வோம் அவர் வழியில் நடப்போம் அன்பின் பிள்ளைகளாக மாறுவோம்❤