இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

படியேறி வருகின்றேன் தேவா ***

படியேறி வருகின்றேன் தேவா - என்னை
பலியாக்க வருகின்றேன் தேவா - நான்
படியேறி வருகின்றேன் தேவா

1. மகனையே பலியாகக் கேட்டாய் - அபிரகாம்
மனமார பலியாகத் தந்தார்
மனதினை மாசின்றிக் கேட்டாய் - நான்
மகிழ்வோடு தருகின்றேன் உனக்கே

2. ஏழை நான் என்றேங்கி நின்றேன் - எனக்கு
நீ வேண்டும் வாவென்று சொன்னாய்
பிழை செய்து நான் வாழ்ந்த போதும் - நீ
தயைசெய்து எனை ஏற்றுக் கொண்டாய்