படைத்தளித்தாய் எந்தன் பரம்பொருளே ***

படைத்தளித்தாய் எந்தன் பரம்பொருளே - இன்று
எடுத்தருளே ஏழை கொடுப்பதனை

1. நறுமணம் வீசும் மலர் கொணர்ந்தேன்
நாவினிற்கினிய கனி கொணர்ந்தேன்
கரங்களை விரித்தே எனையளித்தேன்
கனிவுடன் ஏற்பீர் பரம்பொருளே

2. வெண்ணிறப் பொருளாம் அப்பமிதோ
செந்நிறப் பழரச பானமிதோ
அண்ணலே உன் அடி அர்ப்பணமே
அன்புடனே இதை ஏற்றிடுமே

3. வெண்புகை கமழும் தூபமிதோ
கண்களில் வடிகண்ணீருமிதோ
வெண்ணிற முல்லை மலர்களிதோ
வேந்தனே விரும்பி ஏற்பாயோ