ஜப்பானில் நாகசாகியில் மரித்த 26 வேதசாட்சிகள் ***

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 06ம் நாள் திருச்சபை வரலாற்றில் ஜப்பானில் நாகசாகியில் மரித்த 26 வேதசாட்சிகளின் நாளை நினைவுகூர்கிறது..

யார் இந்த மறை சாட்சிகள்..அறிந்துகொள்வோம் 

ஜப்பான் நாகசாகியில் 26 கத்தோலிக்கர்கள் ஆண்டவருக்காக வேத சாட்சிகளாக மரித்தார்கள்..இவ்வாறு மரித்தவர்களில் 3 இயேசுசபை துறவிகள், 6 வெளிநாடுகளை சேர்ந்த பிரான்சிஸ்கன் சபை துறவிகள், கத்தோலிக்க பொது நிலையினர் குழந்தைகள் உள்ளடங்கும்.

இந்த படுகொலை நடைபெற முன்னர், ஜப்பான் தேசத்தில் புனித பிரான்சில் சேவியரின் மறைபரப்பு பணியால், ஏறத்தாள 200,000 பேர் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்று வாழ்ந்தார்கள்.

கி.பி 1587 வது ஆண்டளவில் ஜப்பானிய தேசத்தில் மதங்களுக்கு இடையிலான பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டதுடன் பல கத்தோலிக்க தேவாலயங்கள் அழிக்கப்பட்டன. பல துறவிகள், மறைபரப்பாளர்கள் மறைமுகமாக இறைபரப்பு பணிகளை செய்யத்தொடங்கிய காலம் இது. நிலக்கீழ் சுரங்கங்களில் மறைமுகமாக வழிபாடுகள், திருப்பலிகள் நடை பெறத்தொடங்கின. ஆனாலும் வெளிப்படையாக கொலைகள் நடைபெறவில்லை எனலாம். இருந்தாலும் பதட்டமான ஒரு சூழலே. இந்த காலப்பகுதில் மாத்திரம் ஏறத்தாள 100,000 பேர்வரையில் கத்தோலிக்கம் தழுவினார்கள். 

கி.பி 1593 வது ஆண்டு ஸ்பெயினானது பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த மறைபரப்பாளர்களை ஜப்பான் நாட்டுக்கு செல்ல கூறியது..

ஏனென்றால் இந்த மறைபரப்பாளர்கள் விசுவாசத்தில் மிகுந்த உறுதியோடும், ஆர்வமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். தங்கள் விசுவாசத்தை செயல்களில் காட்டினார்கள். மிகுந்த அன்பும், இரக்கமும், இயேசுவுக்காக எதையும் எதிர்கொள்ளும் மன நிலையில் இவர்கள் இருந்தார்கள்..

இவர்கள் அன்றைய சூழலில் மிகவும் வலிமை வாய்ந்த பொறுப்பிலிருந்த ஜப்பானிய அமைச்சர் டொயோட்டோமி ஹிடயோஷி என்பவனால் (Toyotomi Hideyoshi) கப்பலொன்றில் வைத்து; இந்த மறை சாட்சிகள் கைது செய்யப்பட்டார்கள். அவ்வாறு செய்யப்பட்ட அனைத்து கத்தோலிக்கர்களையும் கொலை செய்யும்படி உத்தரவிடப்பட்டது.

இவ்வாறு கொலைத்தண்டனைக்கு உத்தரவிடப்பட்ட அனைவரும் சுமார் 600 km தூரம் கைதுசெய்யப்பட்ட இடத்தில் இருந்து மற்றயை நகரான நாகசாகிவரை பல்வேறு சித்திரவதைகளோடு நடத்தி செல்லப்பட்டு, இயேசுவைப்போலவே சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட பணிக்கப்பட்டார்கள்.

இதை ஜப்பானிய மக்கள் ஒரு முன் எச்சரிக்கையாக பார்க்க வேண்டும் என்பதற்காக செய்தார்கள்..

இவ்வாறான சித்திரவதைகளில் பயணித்த இந்த வேத சாட்சிகள் தொடர்ந்து செபித்துக்கொண்டு பயணித்தார்கள். 

வழி நெடுங்கிலும் "Te Deum" என்னும் கிரகோரியன் கீதத்தை பாடிக்கொண்டே சென்றார்களாம்.

{(https://youtu.be/-UcLDOKplOw) Te Deum ஆங்கிலத்தில் "Thee, O God, we praise"}

இவ்வாறு கொண்டு செல்லபட்டவர்கள் அந்த நாகசாகி வீதிகளூடாக செல்லும்போது சிலுவையில் அறையப்பட்டு அவர்களின் காதுகள் வெட்டப்பட்டன..அந்த வெட்டப்பட்ட காதுகளிலிருந்து வழியும் இரத்தமானது அவர்களின் முகங்களில் பூசப்பட்டன. 

ஏனென்றால் இதைப் பார்க்கும் மற்றய ஒவ்வொரு ஜப்பானியர்களும் இதன்பிறகும், இயேசுவை ஏற்று கத்தோலிக்கத்தை நோக்கி செல்லக்கூடாது என்பற்காக இந்த கொடுமைகளை செய்தார்கள். இவ்வளவு கொடுமைக்கு மத்தியிலும்; இந்த வேத சாட்சிகள் ஆண்டவரில் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள் இறுதிவரை..

இறுதியாக அனைவரும் சிலுவையில் அறையப்பட்டார்கள். பின்னர் அனைவரும் பிடிக்கப்பட்ட குழந்தைகளோடு சேர்த்து தள்ளிவிடப்பட்டு கொடுரமாக கொலை செய்யப்பட்டார்கள்..

வேத சாட்சிகளாக இயேசுவுக்காக மரித்தார்கள்.

இவ்வாறு சிலுவையில் அறையப்பட்டிருந்த போது மறைசாட்சியாக மரித்த புனித பவுல் மிக்கி தனது இறுதி வார்த்தைகளை இவ்வாறு கூறினார்..

"நீங்கள் தீர்ப்பிடப்பட்டு இறந்து கொண்டிருக்கும் இவர்கள் எல்லோருமே பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து ஜப்பான் வந்தவர்கள். அவர்களை கொல்ல வேறு நாட்டவர்கள் என்று நீங்கள் கூறினாலும் நான் இந்த நாட்டவன். ஜப்பானியன். என்னை நீங்கள் கொல்ல ஒரே ஒரு காரணமே. நான் இயேசுவை அறிவித்தேன். அவரை குறித்து பறைசாற்றினேன். இதற்காகவே நான் கொல்லப்படுகிறேன். என் ஆண்டவருக்காக கொல்லப்படுவதற்காக நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இயேசுவை முன்மாதிரியாக கொண்டு, இன்று என்னை துன்புறுத்தும் உங்களை மன்னிக்கிறேன். உங்களை நான் வெறுக்கவில்லை. என் இரத்தும், அனைவர் மீதும் மிகுந்த பயனளிக்கும் மழையாக பொழியப்படும் என விசுவசிக்கிறேன்" என்றார்

*பின்னாளில் இவர்கள் அனைவரும் புனிதர்களாக பிரகடணப்படுத்தப்பட்டார்கள்.