தவக்கால தவமுயற்சிகள் ***

இயேசுவின் நாமத்தினால் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

தவக்காலம் ஒரு புனிதமான காலம். மனிதன் இறைவனை அதிகம் தேடுகின்ற காலம். இக்காலத்திலே நாம் ஒறுத்தல் முயற்சிகளும் தவமுயற்சிகளும் செய்ய வெண்டுமென்று திருச்சபை நமக்கு எண்பிக்கின்றது. நான் இங்கு ஒருசில ஒருத்தல் முயற்சிகளையும் தவ முயற்சிகளையும் உங்கள் முன் வைக்கிறேன். இவையெல்லாம் இத் தவக்காலத்திலே உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வாழ்வைப் புனிதப்படுத்தும் உங்கள் வாழ்வானது இறைவனோடு ஒன்றாக இணைவதற்கு இது உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

1. தவறாமல் இக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பங்கேற்று நற்கருணை உட்கொள்ளல். அடிக்கடி திருப்பலியில் பங்கெடுத்தல்.

2. வேதாகமத்தை இக்காலத்தில் ஒவ்வொரு நாளும் வாசிக்கப் பழகுவது.

3. வெள்ளிக்கிழமைகளில் இயேசுவின் பாடுகளை வேதாகமத்தில் வாசித்துத் தியானிக்கலாம்.

4. வெள்ளிக்கிழமைகளில் ஒருசந்தி - சுத்த போசனம் கடைப்பிடிக்க வேண்டும். முடிந்தால் இக்காலம் முழுவதும் சுத்த போசனம் கடைப்பிடிக்கலாம்.

5. வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதையை செபித்தல்... முடிந்தால் ஒவ்வொரு நாளும்.

6. ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லுதல்.

7. நேரம் கிடைக்கும் போது நற்கருணை ஆண்டவரை சந்தித்தல்.

8. குடும்ப இரவுச் செபம் சொல்ல ஆரம்பிக்காதவர்கள் இக்காலம் முழுவதும் சொல்ல முயற்சித்தல்.

9. மனவல்ய ஜெபத்தை அடிக்கடி சொல்லுதல். உதாரணமாக : இயேசுவே என் மேல் இரக்கமாயிரும். இயேசுவே நான் பாவி. இயேசுவே உம் இரத்தம் என்னை கழுவப்படும். உம் பாடுகள் என்னைத் தேற்றட்டும்.

10. துன்ப துயரத்தில் இருப்போர் இயேசுவின் பாடுகளை தியானித்து, ஆறுதலும் நம்பிக்கையும் அடைதல்.

11. பாவசங்கீர்த்தனத்தை அடிக்கடி பெற முயற்சித்தல்.

12. கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் ஆன்மீக வளர்ச்சிக்காக பயன்படுத்துதல்.

13. மது அருந்துதல், புகைப்பிடித்தல் இவற்றை தவிர்க்க முயற்சித்தல்.

14. தொலைக்காட்சி தேவையற்ற புத்தகங்கள் வாசித்தல், இவற்றில் கட்டுப்பாட்டை கொண்டுவர முயற்சித்தல்.

15. கிடைக்கும் அடிப்படைச் சம்பளத்தில் பத்தில் ஒரு பகுதியை இறைப்பணிக்கு செலவு செய்தல்.

16. காலை, மாலை, நண்பகல் உணவுகளுக்கிடையே பயன்படுத்தப் படும் குளிர்பானம், தேனீர், சிற்றுண்டி முதலியவற்றைத் தவிர்த்தல்.

17. நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்லுதல்.

18. சமாதான குறைவுடன் வாழும் குடும்பத்தில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்தல்.

19. அடிக்கடி செய்யும் பாவத்தை - தவறை விலக்குதல்.

20. விருப்பமான உணவை வகையில் கட்டுப்பாட்டைக் கொண்டு வருதல்.

21. ஒவ்வொரு நாளும் ஏதாவது சிறு உதவி செய்தல்.

22. எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆடம்பர நடை உடை நகை அழகு சாதனங்களை அகற்றுதல்.

23. மனத்தாங்கல் உள்ளோரை மன்னித்து அன்புடன் பழகுதல்.

24. அநியாய வட்டி வாங்காமல் பிறரைத் துன்பத்திற்கு உள்ளாக்காமல் இருப்பது.

25. ஒருசந்தி நாட்களில் ஏழைகளுக்கு உதவுதல்.

26. ஆணவத்தை அகற்றி தாழ்ச்சியோடு இருத்தல்.

27. கெட்ட சிந்தனையின்றி கெட்ட வார்த்தைகள் பேசாதிருத்தல்.


அருட்பணி. ஜான் பென்சன்

பவளம் கலைத்தொடர்பகம், தூத்துக்குடி மறைமாவட்டம்