இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மட்டுமிதமின்மை, அல்லது அசுத்ததனம் போன்ற ஏதாவது ஒரு தீமையை வெல்ல ஜெபம்

அப்போஸ்தலராகிய முத்திப்பேறு பெற்ற இராயப்பரின் விலங்கை முறித்து, எந்தத் தீங்குமின்றி அவரை வெளி வரச் செய்தவரான சர்வேசுரா, ........... என்னும் தீமையின் (இதன் வகையைக் குறிப்பிடவும்) அடிமைத்தளையால் பிணைக்கப் பட்டிருக்கிற உமது ஊழியனாகிய ............. (பெயரைக் குறிப்பிடவும்) கட்டுக்களை அவிழ்த்தருளும். அதே அப்போஸ்தலரின் பேறுபலன்களின் வழியாக, அதன் கொடுங்கோன்மையினின்று காப்பாற்றப்பட எனக்கு (அவனுக்கு, அவளுக்கு) தயை செய்தருளும். என்னுடைய (அவனுடைய, அவளுடைய) இருதயத்திலிருந்து சரீர இன்பங்கள், தடையற்ற இன்ப நுகர்ச்சி ஆகியவற்றின் மீதான அளவுக்கதிகமான நேசத்தை அகற்றியருளும். இதனால், உணர்ச்சிகளுக்கு அடிமையாகாத சமநிலையோடும், பக்தியோடும், நீதியோடும் வாழ்ந்து, தேவரீரோடு அடியேன் நித்திய ஜீவியத்தை அடைந்து கொள்வேனாக. ஆமென்.