கெட்ட சிந்தனைகளுக்கு எதிரான ஜெபம்

சர்வ வல்லவரும், பூரண தயையுள்ளவருமாயிருக்கிற சர்வேசுரா, எங்கள் ஜெபங்களை ஆதரவாய்க் கண்ணோக்கி, இஸ்பிரீத்து சாந்துவின் தகுதியுள்ள வாசஸ்தலங்களாக மதிக்கப்பட நாங்கள் தகுதி பெறும்படியாக, கெட்ட சிந்தனைகளின் சோதனைகளிலிருந்து எங்கள் இருதயங்களை விடுவித்தருளும். உமது மகத்துவத்திற்குத் தகுதியானதும், உமக்குப் பிரியமானதுமாகிய நினைப்புகளையே எப்போதும் நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்வும், எப்போதும் நேர்மையான மனங்களோடு தேவரீரை நேசிக்கவும் தக்கதாக, உமது வரப்பிரசாதத்தின் ஒளியை எங்கள் இருதயங்களின் மீது பொழிந்தருளும். எங்கள் ஆண்டவராகிய சேசு கிறீஸ்துநாதர் வழியாக. ஆமென்.