டாம் கெளரான் கர் (Dom Gueranger) அவரது "திருவழிபாட்டு ஆண்டு” என்ற நுாலில் மூன்று இராஜாக்களின் திருநாளுக்கு தயாரிப்பதற்காக, குடும்பங்களின் பழக்க வழக்கங்களை விவரிக்கும் போது, இத் தகையவைகள் நமது முன் னோர்களின் விசுவாசத்திற்கு எளிய விதமாகத் திரும்புதலுக்கு உதவுகின்றன என்று கூறுகிறார்.
அவர் நமது வேதத்தின பரிசுத்தமான காரியங்கள், நிகழ்ச்சிக ளோடு, குடும்ப சந்தோஷத்தின் அவசியத்தையும் ஆணித்தரமாகக் கூறுகிறார். இத்தகைய அழகிய பாரம்பரியமான பழக்கங்கள் மீண்டும் குடும்பங்களில் கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்வோமாக. திருச்சபையும் கூட, கத்தோலிக்க நாடுகளில் திருநாட்களை விசுவாச உணர்வோடு கொண்டாட, மிக அற்புதமான இராகங்கள், பாடல்கள், உணவு தயாரிக்கும் முறைகள், கதைகள் மற்றும் விளையாட்டுகளைக் கொண் டாடத் துாண்டுகிறது.
இவைகளைத் தவிர குழந்தைகள் தங்களது விசுவாசத்தை நேசிக்கச் செய்ய சிறந்த வழிகளை நான் அறியவில்லை . இதன் மூலம் அவர்கள் திருச்சபை ஒரு நல்ல தாய் என்பதையும், அதனுடைய குழந்தைகளான நமது மகிழ்ச்சியைத் தான் திருச்சபை தேடுகிறது - ஆசிக்கிறது என்பதையும் உணர முடிகிறது.
இப் போது, நமது பாரம் பரியக் கத்தோலிக்கர்களிடையே அடிக்கடி தாராளமாகக் காணப் படும் ஒரு குறையைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அது என்னவென்றால் - இயல்பான நியதியை புறக்கணிப்பதே அது! அர்ச். தாமஸ் அக் கு வீனாஸ், ''வரப் பிரசாதம் இயல்பை அகற்றுவதில்லை , மாறாக அதனை உத்தமமாக்குகிறது” என்று போதிக்கிறார். இதற்கு என்ன பொருள் என்றால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஆன்மாவில் சுபாவத்துக்கு மேலான புண்ணியங்களை (விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், ஒழுக்க நன்னடத்தை) மட்டுமல்லாமல் சுபாவத்துக் கடுத்த இயல்பான புண்ணியங்களிலும் (பண்பாடு, நேர்மை, விடாமுயற்சி போன்றவை) வளரச் செய்வதைக் கடமையாகக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, நான் கோடிட்டுக் காட்ட விரும்புவது, அறிவு உருவாக்கத்தின் அவசியத்தையே! உள்ளார்ந்த ஞான ஜீவியத்தின் விதைகள் இயல்பான, முழுமையான உள்ளத்தில் தான் சிறப்பாக வளரும் என்பது நிச்சயம். இதனைச் சில உதாரணங்கள் மூலம் சற்று தெளிவுப் படுத்துகிறேன்.
இளம்பருவத்திலுள்ள உங்கள் பிள்ளைகள், அவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது சிறு, சிறு பக்தி இராகங்களையும், ஞானப்பாடல்களையும் பாடப் பழகாதிருக்கும் பட்சத்தில், அவர்கள் தேவாலயத்தில் தேவ வழிபாட்டுக் கீதங்களையும், இராகங்களையும் (குறிப்பாக உயிர்ப்பு திருவிழிப்புச் சடங்கில் பாடப்படும் உயிர்ப்பு அறிவிப்பு பாடலை) ஏற்றுப் பக்தியோடு பாட வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர் பார்க்க முடியும்?
அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது, எளிய பாடல்களை ஒரு போதும் பாடியது இல்லையென்றால், அவர்கள் கிரகோரியன் இராகங்களை தேவாலயத்தில் பாடவும் அதில் துய்க்கவும் வேண்டுமென்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்கள் முதன் முதலில் வாசிக்கத் துவங்கும் சமயத்தில் நல்லப் புத்தகங்களையும், சிறுவர் கதைகளையும் படிக்கவில்லை யானால், அவர்கள் எப்படி அர்ச்சிஷ்டவர் களின் வாழ்க்கை வரலாறு களை வாசிக்க முடியும்? சிறந்த கத்தோலிக்க எழுத்தாளரான சார்லஸ் 'பேகேய்' என்பவர் கூறுவது போல . . . விசுவாசத் திற் கும் கலாச்சாரத்திற்குமிடையே எந்த எதிர்ப்புக்கான வாய்ப்பும் இல்லை.
ஆனால் அவற்றை நல்ல முறையில் பரிச்சயம் செய்வதில் தான் இந்த எதிர்ப்புகள் உள்ளன. ..” என்று கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதாயிருந்தால், கிறிஸ்தவக் கலாச்சாரம், பண்பு ஆன்மாவின் உணர்வுகளைச் செம்மைப்படுத்துகிறது. ஞான வாழ்வின் மலர்ச்சிக்குத் தேவையான சிறந்த சூழ்நிலைகளை உருவாக்கித் தருகிறது.
மீண்டும் ஒருமுறைச் சொல்கிறேன்: அர்ச். குழந்தை சேசுவின் தெரே சம் மாளின் குடு ம் பத் தின் கதையை வாசித்தீர்களானால், எப்படி அவளது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்விக்கும், அவர்கள் கதைகள், கவிதைகள், பாடல்கள் எழுதுவதிலும், படங்கள் வரைவதிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று ஆசித்தார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
அவர்கள் தங்கள் குழந்தைகளோடு விளையாடுவார்கள், அவர்களது விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆம்! இந்த உண்மையை மீண்டும், மீண்டும் உணர வேண்டும். பாரம்பரியக் கத்தோலிக்கராக இருப்பது லத்தீன் பூசைக்குச் செல்வது மட்டுமே அல்ல, மாறாக முழுமையான கத்தோலிக்க வாழ் வையும் கொண்டிருப்பதேயாகும்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠