கிறிஸ்தவ திருமணத்தின் இயல்பும் அதன் நோக்கமும்

திருமணம் என்பது ஆண் பெண் ஆகிய இருவரிடையே நிரந்தரமாக அமைந்த ஓர் ஒன்றிப்பு. இந்த ஒன்றிப்பு மனுக்குல விருத்திக்காகவும் தம்பதிகளின் வாழ்வை நிறைவுபடுத்தும் பொருட்டும் இறைவனால் உண்டாக்கப்பட்டது.

இந்த ஒன்றிப்பையே மனுக்குல மீட்பராகிய கிறிஸ்து யேசு புதிய ஏற்பாட்டின் அருட்சாதனங்களுள் ஒன்றான மெய்விவாகம் என்னும் உன்னத தானத்துக்கு உயர்த்தியுள்ளார். அதாவது தப்பாது அருள் வாழ்வை வழங்கும் அடையாளங்களுள் ஒன்றாக உயர்த்தியுள்ளார்.

கிறிஸ்தவ திருமணமானது பாஸ்கா மறை நிகழ்ச்சியின் வழியாகக் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையில் உண்டான நிலையான அன்புக்கு அடையாளமாகும். ''கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்து அதற்காகத் தம்மையே கையளித்தார். அத் திருச்சபை கறைதிரையோ வேறு எக்குறையோ இன்றிப் பரிசுத்தமும் மாசற்றதுமாய்த் தம் திருமுன் மகிமையோடு துலங்கச் செய்ய வேண்டுமென்று அவர் திரு வார்த்தையாலும் முழுக்காலும் அதைத் தூயதாக்கிப் பரிசுத்தமாக்குவதற்குத் தம்மைக் கையளித்தார்.

அவ்வாறே கணவர்களும் தம் மனைவியைத் தம் சொந்த உடலெனக் கருதி அவர்களுக்கு அன்பு செய்ய வேண் டும். மனைவிக்கு அன்பு காட்டுபவன் தனக்கே அன்பு காட்டுகிறான். தன்னுடைய உடலை எவனும் என்றும் வெறுப்பதில்லை. எவனும் அதைப் பேணி வளர்க்கிறான். கிறிஸ்துவும் அவ்வாறே திருச்சபையைப் பேணி வளர்க்கிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புக்கள் அதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுத் தன் மனைவியோடு கூடி இருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள். இதில் அடங்கிய உண் மை பெரிது. இது கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் பொருந்தும் என்று நான் சொல்லுகிறேன். ' ' (எபே. 5:25-32)

அன்பு, பிரமாணிக்கம் என்பவற்றின் மேல் எழுந்த உடன் படிக்கையின்படி கடவுள் தம் மக்களை முன்பு சந் தித்தது போல இப்போது மாந்தரின் மீட்பர், திருச் சபையின் மணமகன், திருமணம் என்னும் அருட்சாத னத்தின் வழியாகக் கிறிஸ்தவ மணமக்களைச் சந்திக்க வருகிறார். அவர் தம் திருச்சபைக்கு அன்பு செய்து அதற்காகத் தம்மையே கையளித்தது போல மணமக்களும் ஒருவரொருவருக்குத் தங்களைக் கையளித்து நிலையான பிரமாணிக்கத்துடன் அன்பு செய்ய வேண்டு மென்ற நோக்கத்தோடு அவர் அவர்களோடு தங்கியிருக்கிறார். (G. S. n. 48)

இவ்வாறு கிறிஸ்தவ திருமணம் கிறுஸ்துவைச் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சி. இந்தச் சந்திப்பு, திருமணத்தாற் குறிக்கப்படும் அருள் உயிரை வழங்குவதுமல்லாமல் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையில் உள்ள அன்பைப் பிரதிபலிக்கும் சாயலாகவும் அமையும்.

புதிய ஏற்பாட்டின் அருட்சாதனங்களின் தாபகரான கிறிஸ்து தமது மணவாட்டியாகிய திருச்சபையிடமே அவற்றைக் கையளித்தார். எனவே திருமணம் முறையே நிறைவேற்றப்படுவதையும் கிறிஸ்தவ குடும்பம் செவ்வனே செயற்படுவதையுங் குறித்துச் சட்டங் கள் இயற்றத் திருச்சபைக்கு மாத்திரமே உரிமையுண்டு.

கிறிஸ்தவ திருமணத்தின் கொடைகள்

திருச்சபையின் புகழ் பெற்ற வேத பண்டிதரான புனித அகுஸ்தீனாரின் கருத்துப்படி கிறிஸ்தவ திருமணம் பற்றிய முழுப் போதகமும் மேல் வரும் மூன்று தலைப்புக் களில் அடங்கியுள்ளது. திருமணத்தையே ஒரு கொடை யாக்கும் கொடைகள் எவையெனின் : புத்திர சந்தானம், பிரமாணிக்கம், அருட்பிரசாதம் என்பனவாம்.