புத்திர சந்தானம்

மெய் விவாகத்தால் நாம் அடையும் நலன்களுட் புத்திர ச ந் த ா ன ம் முதலிடத்தை வகிக்கின்றது . தொடர்ந்து புனித அகுஸ்தீனார் விளக்கம் தரும் வகை யில் புத்திர சந்தானம் என்னும்போது பிள்ளைகள் ஆவலுடன் வரவேற்கப்படுவதையும், பரிவன்புடன் வளர்க்கப்படுவதையும் இறைப்பற்றுடன் பயி ற் ற ப் படுவதையுமே நாம் கருதுகின்றோம்'' என்கிறார். திரு மண ஸ்தாபனமும் திருமண அன்பும் பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதையே இயல்பான நோக்கமாகக் கொண்டுள்ளன. (G. S. n. 43).

பதினோராம் பத்திநாதர் பாப்பிறை கிறிஸ்தவப் பெற்றோருக்கு அளிக்கும் அறிவுரையாவது 'மண்ணுல கில் மனித இனம் பலுகிப் பெருகி நீடிக்கச் செய்வதும் உண்மைக் கடவுளை வழிபடும் ஒரு கு ழு வி ன ரை அமைப்பதும்மாத்திரமே கிறிஸ்தவப்பெற்றோரின் கடமை என எண்ணலாகாது. மாறாக அவர்கள் இறை மக்க ளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் பெற்றெடுப்பார் களாக. இவ்வாறு இரட்சகராகிய இறைவனை வழிபடும் குழுவினர் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனி யுமாக அதிகரிப்பார்களாக. (Casti Connubii C. T. S. London edN. 14) எனவே புத்திர சந்தானமானது பெரும் தொல்லை தரும் பாரச்சுமை என்ற கருத்து, கிறிஸ் தவ அல்லது மனித கண்ணோட்டத்துக்கு உரியதன்று.

ஆயினும் எத்தனை பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடி யுமோ அத்தனை பிள்ளைகளையும் பெற்றெடுக்க வேண்டும் மென்று பெற்றோர்கள் எண்ணலாகாது. ஆகவே, அவர் கள் தங்களின் அலுவலை மனிதனுக்குரிய பொறுப்புணர்ச் சியுடனும் நிறைவேற்றுவார்கள். கடவுள்பால் பணி வான வணக்கத்தோடு பொது ஆலோசனையாலும் முயற் சியாலும் அவர்கள் சரியான முடிவுக்கு வருவார்கள். இவ்வாறு செய்யும்போது அவர்கள் தங்களின் நலத்தைக் கருதுவதுடன் தங்களுக்குப் பிறந்த, பிறக்கப் போகிற குழந்தைகளின் நலத்தையுங் கருதுவர். அவர்களின் ஆன்ம உடல் வாழ்க்கை நிலைமைகளையும், கால நிலை மைகளையுங் கருத்திற் கொள்வர். அ வ ர் க ளி ன் குடும்பச் சமூகத்தினுடையவும் உலக சமூகத்தினுடை யவும் திருச்சபையினுடையவும் நலனைபற்றியும் எண்ணு வர். இறுதியாக மணமக்களே கடவுளின் முன்னிலையில் இந்த முடிவைச் செய்ய வேண்டும். கிறிஸ்தவ மணமக் கள் தங்கள் விருப்பப்படி செயற்பட முடியாது. ஆனால் இறைச் சட்டத்துக்குச் சரியாக ஒத்திருக்கும் மனச்சான் றினால் எப்போதும் வழி நடத்தப்படவேண்டும் என்பதை அவர்கள் உணர்வார்களாக. மேலும் இறைச் சட்டத்திற்கு நற்செய்தி ஒளியில் அதிகார பூர்வமாகப் பொருள் விளக்கிக் கூறும் திருச்சபையின் ஆசிரியத்துக்கு அவர் கள் அமைந்து நடப்பார்களாக. (Vat II G. S. n. 50)

பெற்றெடுக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையைப் பற்றியோ அவர்களுக்காகச் செய்யப்படும் தி யா க ம் பற்றியோ எடுக்கப்படும் தீர்மானங்கள் இன்பமயமான வாழ்வை நிச்சயப்படுத்தும் தீர்மானங்களாக இருக்கப் படாது. பெற்றோர், மெய் விவாகம் என்னும் அருட் சாதனம் வழங்கும் அருளையும் திருச்சபையின் போத கத்தையும் இறைவன் திருமுன் தியானிக்க வேண்டும் அதன் விளைவாக அவர்கள் மாபெரும் உண்மையை உணர்வார்கள். அதாவது தங்கள் பிள்ளைகளின் வாழ் விலே செளகரியங்களிற் சிலவற்றைக் குறைப்பதைக் காட்டிலும் வெவ்வேறு வாழ்க்கை நிலைகளின் அழகை அனுபவிக்க உதவும் தம்பி தங்கையரின் பிறப்பைத் தடுத்து விடுவது ஆட்சேபனைக்குரியதாகும். (Hom. in Washington n. 5)

பிறப்பைக் கட்டுப் படுத்துவதற்குச் சட்ட விரோத மான செயல் முறைகளைக் கையாளப்படாது. பாப் பிறை பதினோராம் பத்திநாதர் அழுத்தந் திருத்தமாக வெளியிட்டதாவது ' கணவன் மனைவியரின் உடலுறவின் நோக்கம் ஓர் உயிரைத் தோற்றுவிப்பதேயாம். மாறாக ஓர் உயிரைத் தோற்றுவிப்பதற்குப் பதில் ஒருவன் இயற் கைக்கு இயல்பாக உள்ள ஆற்றலைச் செயற்கை முறை யால் தடுத்து விடுவானாயின் இறைச் சட்டத்துக்கு மாறாக மாபெரும் பாவம் புரிகின்றான்'' (Casti Connubii).

உண்டான கருவைச் சிதைப்பதற்குத் திட்டமிட்டுச் செய்து கொண்ட நேரடித் தடுப்பு முறை சுகாதார நோக்கத்துக்காகச் செய்து கொண்டாலுங் கூட, சட்ட விரோதமானது என்று முற்றாக விலக்கப்பட வேண்டிய தடுப்பு முறையாம்.

மேலும் திருச்சபையின் ஆசிரியம் அடிக்கடி எச்சரித் துள்ளது போல் ஆணும் பெண்ணும் சில காலத்துக்கோ நிரந்தரமாகவோ தங்களை நேரடியாக மலடு ஆக்குதல் விலக்கப்பட வேண்டிய தடுப்பு முறையாம். இன்னும் திருமணச் சேர்க்கைக்கு முன் நிகழ்த்தும் எச் செய லும் சேர்க்கையுடன் இணைந்த எச் செயலும் சேர்க் கையின் முடிவாக விளையும் எச் செயலும் பிறப்பைத் தடுப்பதாக இருத்தல் ஆகாது. (Paul VI Humanae Vitae n. 14. G. S. n. 51)

ஆயினும், கணவன் மனைவியர் தங்கள் உடல் உள்ள நிலைகளைப் பொறுத்து அல்லது பிற நிபந்தனைகளின் நிமித்தம் பிறப்பின் கால எல்லையை நீடிக்க விரும்பி னால் திருச்சபை அவர்களுக்குச் சலுகை ஒன்று அளிக்கி றது. அதாவது இயற்கை ரீதியின் படி கருக் கொள் ளாத செழிப்பற்ற கால வட்டத்தை மனதிற் கொண்டு அக்கால எல்லைக்குள் தம்பதிகள் தங்கள் மணச் சேர்க் கையை வைத்துக் கொள்ளல் விலக்கப்பட்டதன்று என்று திருச்சபை போதிக்கிறது. இவ்வாறாக ஒழுகும் போது ஒழுக்க நெறி பேணப்படுவதுமன்றி இனப் பெருக்கமுங் கட்டுப்படுத்தப்படுகிறது . (Humanae Vitae n. 16)

தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்குக் கல்வி புகட் டுதல் பெற்றோரின் புனித கடமையும் உரிமையுமாகும் கிறிஸ்தவ கல்வி முறையின் சிறப்பான நோக்கம் இறை யருளுடன் ஒத்துழைத்து உண்மையான முழுமையான கிறிஸ்தவனை உருவாக்குவதேயாம். அதாவது புனித சின்னப்பரின் கூற்றுப்படி திருமுழுக்கினாற் புதுப்பிறப் படைந்தவர்களில் கிறிஸ்து உருவாக்கப்படுவதாம். அரு மைக் குழந்தைகளே, குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்போல் உங்களிற் கிறிஸ்து உருவாகும் வரை மறு படியும் நான் உங்களுக்காக வேதனையுறுகின்றேன், (Gal 4-9)

ஏனெனில், கிறிஸ்தவன் மனித இயல்புக்கு மேலான ஒரு வி ய த் த கு வாழ்வு வாழ வேண்டியவன், அந்த வாழ்வு நெறி அவனுடைய மற்றும் எல்லாச் செயல்க ளிலும் பிரதிபலிக்க வேண்டும். இதன் நிமித்தமாகவே கிறிஸ்தவ கல்வி முறையானது மனித வாழ்வின் எல்லா அம்சங்களையும், அதாவது அவனது ஆன்ம், சரீர, குடும்ப சமுதாய அறிவியல் போன்ற எல்லாத் துறைகளிலும் செலுத்தப்பட வேண்டியதாம். அவனது வாழ்வைச் சீர் கெடுக்கும் பொருட்டு அன்று, மாறாக கிறிஸ்துவின் எடுத்துக் காட்டின படியும் அவரது போதனையின் படியும் அதை உன்னத நிலைக்குக் கொணர்ந்து முழுைமப்படுத்துவதற்கேயாம். (Pius XI Divini Illius Magistri)