இன்றைய உலகில் கிறிஸ்தவ குடும்பத்தின் பணி

''கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்குமிடையேயுள்ள அன்பு ஒப்பந்தத்தின் சாயலும், பங்கு கொள்ளலுமான திருமணத்திலிருந்து, கிறிஸ்தவ குடும்பம் தோன்றுகின் றது. எனவே, மீட்பர் உயிருள்ள முறையில், நம்முடன் இருக்கின்றார் என்பதையும், திருச்சபையின் உண்மை இயல்பையும் மணமக்களின் அன்பினாலும் இனப்பெருக்க வளமையாலும், ஒற்றுமைப் பிரமாணிக்கத்தாலும் எல்லா உறுப்பினருடையவும் அன்புள்ள ஒத்துழைப் பாலும், கிறிஸ்தவக் கிடும்பம் வெளிப்படுத்துவதாக''. (இ. உ. தி. இல. 48) (Harmanae Vitae n. 25 ஐயும் பார்க்க .)

''திருமணப் பிணைப்பு தூய்மையானது, பி ரி க் க முடியாதது எனத் தங்கள் வாழ்க்கையாலேயே வெளிப் படுத்தி எண்பிப்பதும், கிறிஸ்தவருக்கேற்ற முறையில் பிள்ளைகளை வளர்ப்பதும் பெற்றோர் அல்லது காப்பாள் ரின் உரிமையும் கடமையும் ஆகுமென வன்மையாய் வலியுறுத்துவதும், குடும்பத்தின் முறையான தன்னாட்சி உரிமையையும் மாண்பையும் பாதுகாப்பதும், மணமக் களின் கடமையாக என்றும் இரு ந் து வந்துள்ளது. இன்றோ இது அவர்களது அப்போஸ்தல ப ணி யி ன் பெரும் பகுதியாக மாறிவிட்டது. அவர்களும், மற்ற கிறிஸ்தவ விசுவாசிகளும் நன்மனத்தோர் யாவரோடும் ஒத்துழைப்பார்களாக. இவ்வாறு இவ்வுரிமைகளை அர சியல் சட்டங்களும் பழுதின்றி பாதுகாக்கும் படி செய்ய லாம். உறைவிடம், பிள்ளைகளின் வளர்ப்பு, உழைப்பின் நிலைமை, சமூகப் பாதுகாப்பு, வரிகள் ஆகிய குடும்பத் தேவைகளை, சமூகத்தை ஆளுவோர் கருத்தில் கொள்ளச் செய்யலாம். குடிபெயர்வோரைப் பற்றி ஒழுங்கு செய்யும் போது, அவர்களின் குடும்ப வாழ்க்கை முழுவதும் - பாதுகாப்புடன் இருக்கச் செய்யலாம்.

சமுதாயத்தின் முதல் உயிரணுவாயிருக்க வேண்டும் என்ற இந்தப் பணியை இறைவனே குடும்பத்திற்கு அளித்திருக்கிறார். குடும்ப உறுப்பினர் ஒருவருக் கொருவர் காட்டும் பற்றாலும், அவர்கள் ஒன்றாய்க் குழுமி கடவுள் பால் எழுப்பும் செபத்தாலும், திருச் சபையின் இல்லத் திருவிடமாய் இக்குடும்பம் விளங்கு வதாலும், திருச்சபையின் இறை பணியில் குடும்பம் முழுவதும் கலந்து கொள்வதாலும், இறுதியாக விருந் தோம்பும் குடும்பமாகத் தன்னையே காட்டுவதாலும், தேவையுறும் சகோதரர் அனைவரின் தேவைக்காக நீதி யையும், பிற நற்செயல்களையும், ஊக்குவிப்பதாலும் இப்பணியைக் குடும்பம் நிறைவேற்றும். குடும்ப அப் போஸ்தல பணியின் பல்வேறு வேலைகளுள் பின்வருவ னவற்றையும் குறிப்பிடலாம்: கைவிடப்பட்ட பிள்ளை களை எடுத்து வளர்த்தல், முன்பின் தெரியாதவருக்கு வாஞ்சையுடன் விருந்தோம்பல், பள்ளிகள்  ைவ த் து நடத்தத் துணை புரிதல், இளைஞர்க்கு அறிவுரையும், பொருளுதவியும் வழங்கல், திருமணம் புரிய விருப்ப முள்ளவர்கள் சிறந்த முறையில் திருமணத்திற்குத் தங் களை தயார் செய்ய உதவுதல், மறைக்கல்வி புகட்டுதல், பொருளாதார அல்லது ஒழுக்கப் பிரச்சினைகளில் சிக்கி யிருக்கும் மணமக்களையும், குடும்பங்களையும் காப்பாற் றல் போன்றவை; முதியோர்களுக்கு வாழ்வின் தேவை களை நிறைவு செய்வதோடு மட்டுமல்லாது பொருளா தார முன்னேற்ற நலன்களிலே சீரான முறையில் பங்கு பெற உதவி செய்தல்....... தம் அப்போஸ்தலத்துவ குறிக்கோள்களை இன்னும் எளிதில் அடைய, குடும்பங் கள் ஒரு சில குழுக்களாகக் கூடி இணைந்து கொள்வது மிக நலமாக இருக்கும்.

(பொ. நி. அப். இல. 11) (இ. உ. தி. இல. 52 ஐயும் பார்க்கவும்.

''எனவே தெய்வீகச் சட்டத்திற்குப் பிரமாணிக்க மாய் இருக்க தம்பதியர் செய்யும் தாராள முயற்சி யின் பல விளைவுகளில் முக்கியமானதொன்றேதெனில் தங்களது அனுபவத்தில் பிறரும் பங்குபெற வேண்டும் என்ற ஆர்வமாகும். இவ் வி த மா க ப் பொது நிலையி னர்க்கே உரிய அழைப்பில், தமக்கொத்தவர்க்குப் பணி புரிதல் என்னும் புதியதும், சிறப்பானதுமான ஒருவகை அப்போஸ்தன பணி இடம் பெறுகிறது. தம்பதியரே பிற தம்பதியருக்கு அப்போஸ்தலர்களாகவும் வழிகாட் டிகளாகவும் அமைகின்றனர் எத்தனையோ வகையான அப்போஸ்தலப் பணிகளில் இது தற்காலத்திற்கு மிக வும் ஏற்றதாகத் தோன்றுகிறது'' (Humanae Vitae n. 26)

''ஈற்றில், மனிதனின் தூய்மையை அழிப்பதும் மனித மகத்துவத்திற்குத் தீங்கு விளைப்பதும், வெட் கத்திற்குரியதும், கீழ்த்தரமானதுமான, இன்றைய மனி தனின் வாழ்க்கை முறையிலும், நாட்டின் நிர்வாகத் திலும். காணப்படும் தீங்குகளைத் தீர்த்து  ைவ க் க க் கூடிய ஒரோ வழிவகை - குடும்பங்கள் தங்கள் ஞான மேப்பரின் ஏவுதல் மூலமும், வழி நடத்தல் மூலமும் தமது இராசரீக கடமைகளை விளங்கிச் செயல்படுவதே யாகும்'' (Role of the Christian Family p. 45), இது தேசிய ரீதியிலும் அனைத்துலக ரீதியிலும் இடம் பெற வேண்டும்..