கிறிஸ்தவ திருமணம், கிறிஸ்தவ குடும்ப வாழ்வு, அப்போஸ்தலம் என்பதற்கு ஆயத்தம்

திருச்சபையிலும் உலகிலும் கிறிஸ்தவ குடும்பங் கள் ஆற்றும் பணி, மணமக்களுக்கு அளிக்கப்படும் தூர அல்லது நெருங்கிய திருமண ஆயத்தங்களிலேயே பெருமளவு தங்கியுள்ளது. திருத்தந்தை பதினோராம் பத்திதாதர் கூறுகின்றார்:

' 'உறுதியானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஒரு குடும்ப வாழ்க்கை அல்லது சிதைவுகள் நிரம்பிய, கவலைகள் மலிந்த ஒரு துன்ப வாழ்க்கை - பிள்ளைப் பருவத்திலும் குமரப் பருவத்திலும் இடப்படும் அத்திவாரத்தைப் பொறுத்துளதென்பது எவரும் மறக்கமுடியாததொன்று. மணவாழ்வின் முன்னர் தன்னலத்துக்கும் உணர்ச்சிகட் கும் அடிமைகளாய் இருந்தோர் திருமணத்தின் பின் னரும் அதே குறைகளுடன் இருப்பர் என எண்ணுவது சரியானதே. எனவே, இளைஞர்களும் யுவதிகளும் திரு மண வாழ்வின் சிலுவைகளைச் சுமப்பதில் ஒருங்கிணைந்த, ஒருவருக்கொருவர் உறுதுணையாய் விளங்கத்தக்க பயிற் சிகளைப் பெறுதல் அவசியம். அதன் மேலாக கிறிஸ்து வின் நிறைவில் ஆன்மீக வ ள ம் பெற்று, முடிவற்ற வாழ்வை அடையும் வண்ணம் அவர்கள் வழிநடத்தப் படல் வேண்டும். இது சிறார் ம ட் டி ல் ஈடுபாடுள்ள, இறைவிருப்புக்கமைந்த பெற்றோராக அவர்களை ஆக் கம். > > கல்வி பற்றிய தமது சுற்றுமடலில் கூறப்பட்ட எச்சரிக்கையை நினைவூட்டுகிறார் திருத்தந்தை பதினோ ராம் பத்திநாதர்: குழந்தைப் பருவத்திலிருந்தே தீய நாட் டங்களை நசுக்கவும், நல்லனவற்றை வளர்க்கவும் ஊக்கு விக்க வேண்டும். மேலாக, இறையருளின் துணையுடன் திருமறைச் சத்தியங்களை உள்ளத்தில் பதித்து உறுதிப் படுத்துதல் நம் கடன். அன்றோல் அ வர் க ள் தம் சொந்த ஆவல்களை அடக்கியாள முடியாதவர்களாக, திருச்சபை அளிக்கும் போதனையினாலும் பயிற்சியினாலும், நிறைவான --- திருப்திகரமான பயனை அடைய முடிபா தவர்களாக, இருப்பர். திருச்சபையானது மக்கள் சமு தாயத்துக்கு நற்பயனையளிக்கவல்ல ஆ சி ரி ம ய ய ா க விளங்க வேண்டுமென்ற உயர் நோக்குடனேயே இறை வன் பரிசுத்த சத்தியங்களையும் திருவருட் சாதனங்க ளையும் அதற்கு அருளியுள்ளார்'' ( Divini illius Magistri)

தனக்கு ஏற்ற துணைவர் அல்லது துணைவி ஒரு வரைத் தெரிந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்து வதே திருமணத்திற்கான நெருங்கிய முன்னேற்பாடுக ளுள் முதன்மையானது. மணவாழ்வின் மகிழ்ச்சி அல் லது மகிழ்ச்சியற்ற வாழ்வு என்பது தனது துணைவனுக்கு அல்லது துணைவிக்கு உற்ற துணையாக அல்லது துயரத்தின் நிழலாக ஒருவர் வாழ்வதிலேயே தங்கியுள் ளது. ஒரு விவேகமற்ற தெரிவு வாழ்வின் இறுதி வரை துயரக்கடலில் தத்தளிக்கும் நிலையையே கொண்டு வரும். ஆகவே திருமணத்திற்கு ஆயத்தமாவோர் முதலில் தாம் தெரிவு செய்பவர் இறுதி வரை இல்லற வண்டியைத் தம்முடன் இணைந்து இழுத்துச் செல்லக் கூடியவரா என்பதை மிக்க கவனத்துடன் சிந்திக்க வேண்டும். இச்சிந்தனையின் போது இறைவனுக்கும் கிறிஸ்துவின் திருமறைக்கும் முதலிடம் கொடுத்தல் வே ண் டு ம். அடுத்து தம்மைப்பற்றியும் தமது எதிர்கால சந்ததி யைப் பற்றியும், மனித சமுதாயம் - தமது நாடு பற் றியும் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளல் வேண்டும். தம் திருமணம் இவர்களனைவருக்கும் பயன்தரு கருவியாக விளங்குமா என்பதைச் சீர் தூக்கிப் பார்த்தல் பயனுள் ளது. கிறிஸ்துவ விவேகத்துடன் தங்கள்  ெத ரி  ைவ எடுப்பதற்கு தாழ்மை மிகுந்த உள்ளத்துடன் இறை வனை வேண்டுவார்களாக. தகாத தன்னிச்சையான நாட் டங்கள், பணவிருப்பு, வேறு சில்லறைக் காரணங்கள் அனைத்தையும் மனதிலிருந்து அகற்றி தம் துணையாகத் தெரிந்தெடுப்பவர் மீது கொண்டுள்ள நேர்மை, உண்மை மிக்க பாசத்தினாலும் அன்பினாலும் வழி நடத்தப்படு வார்களாக. இறுதியாக தம் அன்னை த ந் தை ய ரி ன் ஆலோசனைகளுக்கும் புத்திமதிகட்கும் மதிப்பளிப்பார்க ளாக. வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த அன்னை தந்தையரின் ஆலோசனைகளும் வழிநடத்தல்களும் ஏற் றுக் கொள்ளப்படுமானால், பின்னர் அவல நி லை க் கு ஆளாக வேண்டியதில்லை என்பதையும் இளம் தலைமுறை யினர் உணர்வார்களாக.'' (Casti Connubii n. 118-121)

கிறிஸ்தவ திருமணம் ஒரு நிரந்தரக்கூட்டுவாழ்க்கை என்பதனால் திருச்சபையானது அதில் ஈடுபட விரும்பு வோரை அதிக கவனத்துடன். வழி நடத்துகிறது.

பொதுவாக கத்தோலிக்கர்கள் ஒரு குருவினதும் இரு சாட்சிகளினதும் சமுகத்திலேயே திருமணத்தை நிறைவேற்றலாம். ஒரு திருமணம் திருச்சபைச்சட்டங் கட்கு இணங்குகின்றதா என்பதைக் கவனிப்பதுடன், திருமண உடன்படிக்கையின் நோக்கம், பொறுப்பு, அத்திருவருட் சாதனத்தின் முக்கியத்துவம் என்ற அம் சங்களை மணமக்கள் நன்கறிந்துள்ளார்களா என்பதை நுணுக்கமாக ஆராய வேண்டியதும் குருவின் தலையாய கடமை. (திருச்சபைச் சட்டம் 1035 - 1080 , 1864). அப்போதுதான் இறையருள் நிரம்பியவர்களாக மண மக்கள் புனிதமான இல்லற வாழ்வினுள் நுழையமுடியும்

திருச்சபையிலும் அனைத்துலகிலும் அப்போஸ்தல பணியை ஆற்றுவதற்கான ஆயத்தங்கள் கி றி ஸ் த வ குடும்பங்கட்கு அவசியம் தேவைப்படுகின்றன. ''பாலப் பருவக் கல்வியிலிருந்தே அப்போஸ்தல பணிக்கான அத்திவாரமிடப்பட்டு, பயிற்சி ஆரம்பிக்கப்படல் வேண் டும்'' என இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுகின்றது. ஆகவே வளரும் பருவத்தினரும் வாலிப சமுதாயத்தினரும் அப்பேஸ் தலபணியிலே இறங்கி அதன் உணர்விலே நிறைந்திருப்பார்களாக. வாழ் நாள் முழுவ தும், பொறுப்புக்களை அவ்வப்போது கையேற்றுச் செவ் வனே நடத்தும் வண்ணம் இப்பயிற்சி அவர்கட்குச் செவ்வனே அளிக்கப்படல் வேண்டும். ஆகவே கிறிஸ் தவ கல்வியைப் போதிக்கக் கடமையுடையோர் அனை வரும் அப்போஸ்தல பணிக்கான பயிற்சியை வழங்கவும் கடமைப்பட்டோராவர் என்பது தெளிவு.

மனித சமுதாயத்தின் மீது இறைவன் வைத்துள்ள அன்புப் பெருக்கை, பாலப் பருவத்திலிருந்தே தம் குழந்தைகள் அறியவும் உணரவும் செய்வது கிறிஸ்தவ பெற்றோரின் தலையாய கடன். அடுத்து அயலவரின் உடல் உளத் தேவைகளில் அக்கறை காட்டும்படி தம் செயல்களால் வழிநடத்துவது பெற்றோரின் பணியா கும். அப்போது குடும்ப வாழ்வு முழுவதும் அப்போஸ் தல பணிக்கு பயிற்சியளிக்கும் ஒரு களமாய் அமை யும்.'' (A. A. 1, 30)