தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருமுடிச்சரிதை - பாகம் 4

ஹா! பரிதாபகரமான காட்சி - பயங்கரமான காட்சி - நடுக்கத்திற்குரிய காட்சி - நாவாலுரைக்க முடியாத காட்சி. ஐயோ! சர்வலோக இராக்கினியாகிய பரிசுத்த பனிமயத் தாயின் கோடி சந்த்ரப்ரபையை யொத்து விளங்கும் வதன மண்டலம் விசனத்திலடி பட்டு விளங்குகின்றது. எத்தகைய கவலை, பீடை, துன்ப துரிதல் களையும் மாத்திரைப் பொழுதில் போக்கடிக்கக்கூடிய கருணாசாகரமாகிய கிருபா நேத்திரங்கள் பார்த்தவர் கள் மனத்தைப்பதைப்புறச் செய்யக்கூடிய வியாகூலத் தைக் கொண்டு விளங்குகின்றன. அன்பும், புன்னகை யும் அமைந்தொழுகும் செம்பவள வாய் வாடிய குமுதத் மலர்போன்று சோகமயத்தை யடைந்திருக்கின்றது. காணுந்தோறும் ஆநந்தாமிர்தத்தை அள்ளியிறைக்கும் பாமதேவதாயினது திவ்யசொரூபத்தோற்றம் யாவ ருள் ளத்தையும் நடுக்குறச்செய்து தேகம் மயிர்க்குச் செறிய ஆலறு முழுவதும் அம்மா! அம்மா! தாயே. தாயே மாதாவே!! மாதாவே! என் றகூக்குரலைக் கடன் முழக்கோ வென்றெண்ணும்படி உண்டு பண்ணிவிட் டது.

ஐயோ! பரிதாபம்! ஆற்றொணாத் துக்கம்! அடக்க முடியாத கஷ்டம்! அறியமுடியாத சம்பவம். என்னை? ஸ்வர்னகசித ரத்ந சிம்மாசனத்தின் மீது திருக்கோவில் கொண்டிருந்தாளாகிய எமதாத்தாளது ஈராறு தாா கை பூத்த, எழின் மிக்க சிரோபாரத்தை அழகுசெய்து கொண்டிருந்த தாகிய வெண் பொற்க்ரீடத்தைக் காண வில்லை .

ஐயோ! அம்மட்டுமா? எம தன்னையின் திவ்யகாத் தில் செவ்விய அன்னம் போல் அமர்ந்து குறு நகை புரிந்துகொண்டிருந்த திருக் குழந்தையாகிய எம்பெரு மான் திவ்ய ஜேசுவினதுசென்னியில் மின்னிக்கொண் டிருந்ததாகியவெண் பொற்கிரீடத்தையும் காணவில்லை.
திரியுலக ராஜேஸ்வரியாகிய எமதன்னைக்கும், எவ் வுயிர்க்குமிறைவனாகிய எமதப்பனுக்கும் ஏக காலத்தில் இவ்வித நிந்தை ஏற்படுமெனில் அதை யாரே சகிக்க வல்லார்? உணர்விழந்தார் பலர், உரையிழந்தார் பலர், மதியிழந்தார் பலர், மனசிழந்தார் பலர், உடல் மறந் தார் பலர், உடனயர்ந்தார் பலர். ஆலயமுழுவதும் கண்ணீரும் கம்பலையுமேயன்றி வேறில்லை. மாதர்கள் ஒருபுறமாய் நின்று ஊற்றுப்பெருக்கோ. ஆற்றுப்பெ ருக்கோவெனக்கண்ணீரைப்பெய்து மாதாவே! மாதா வே! மன்னித்தருளும், மன்னித்தருளும் என் றிரங்கி விம்மி, விம்மியழுமொலி எவ்விதத் தானும் அடக்கமுடி யா ததாயிற்று, குருப்பிர சாதிகளும், திருப்பணியாளரும் ஏனையோரும் ஆலயத்தில் தளம் முதல் முக்டுவரை ஒவ்வோரிடத்தையும் தேடிப்பார்த்தனர். காணப்பட வில்லை. சஞ்சலம் விர்த்தியாகின்றது. சாந்திக்கிடமி ல்லை. அனற் பட்ட மெழு காய் அகங்காைகின் றனர். ஆலை வாய்க்கரும்புபோல் அங்கலாய்க்கின் றனர். ஆல. யத்தின் உட்புறத்தில் பாடகர் ஸ்தலமாகிய மேடை யின் கிராதிகளில் கனத்ததும், மெல்லியதுமாகிய இருகயிறுகள் கட்டிக்கீழே தொங்கவிடப்பட்டிருந்தன கனத்தகயிறு ஆலயமணியில் கட்டியிருந்ததாகும். அக் கயிற்றின் வழியாக மேலேறிப்பார்க்கும்பொழுது வெ ளிப்புறத்திலிருந்து வரக்கூடிய மேடை வாசல்கள் திறக்கப்பட்டிருந்தன. கள்வர், திருடர் என்ற பேரி ரைச்சல், கிளம்பிற்று. மூலைமுடங்கும் வெவ்லரம் தேடி னர். கள் வரையுங் காணோம், கனகசோபித முடிகளை யுங்காணோம்.

ஹா! துரோகம்! சர்வ நலன்களுக்கும் ஊற்றாகவும் உறைவிடமாகவும் இருக்கக்கக்கூடிய எம்பெருமாட்டி யின் திருச்சிரசைத் தீண்டுவார் யார்? திருடுவார் யார்? பேய்க்கும் அரி தன்றோ ? அங்ஙனமிருக்கக் கவி வாடினார் மானிடராகக்கொள்ளுதல் எங்ஙனம்? ஐயோ, முன்னம் எம்பெருமானாகிய திவ்ய ரக்ஷகனைக் கன்னத்தில் முத்த மிட்டுக் காட்டிக்கொடுத்த பன்னிரு சீடர்களிலொருவ னாகிய யூதாஸ்காரியோத் என்னுங் கொடிய பாவியின் செய்கையையொப்ப நயவஞ்சகமாகச் சென்று எமது தாயின் முடியைக் கவர்ந்தார் போலும். சேயனுக்குள் எது தாய்க்கிரா தா ? யூதாஸ் ஸ்காரியோத் தன்னைக் காட் டிக் கொடுக்க இசைந்திருந்த பெருங்குணம் அவனை ஈன்றவளாகிய எமதன்னைக்கில்லாதொழிதல், எங்ஙனம்? ஆனதுபற்றியே, சண்டாளர்கள் எம தன்னையின் திருச் சிரசைத் தீண்டவும், திருமுடியைத் திருடவும் இசைக் தாளன் றி வேறில்லை யென்பதே எமது துணிபு. - ஹா, அம்ம! நின துகருணையை எவ்வா றுரைப்பது? உரைக்கவும், நினைக்கவும் முடியாத கருணாகரச் சமுத் திரமே! நின் து தாசர்களாகிய எங்களுக்குத் துன் பி ழைத்ததாகிய அலகை இன்றும் என்றும் நினது திரு வடித்தாமரைக் கீழ் ஓய்வொழிவின்றி நசுங்கி அல்லற் பட்டுக்கொண்டிருக்க நினது திருமுடி கவர்ந்து செல் லத் துணிந்த அலகையினுங்கொடிய அவ்வலகையை அக் கணமே றோக்க நினையாது அதன் கொடிய எண்ணம் நிறைவேறச் சிரந்தாழ்த்தியதோர் புதுமையன்றோ?

- அமலோற்பவீ ! மன்னுயிர் காக்கத் தன்னுயிர் துறத் தல் என்ற மஹா வாக் கியத்தின் பெருமையை நின்னி டத்தே கண்டேம். நிகரற்ற நினது கருணை நீடு வாழ்க.

- எவ்வித பிரயத்தனங்களும் பலிக்கவில்லை. அழு மொலி தவிர விமோசனத்திற்கிடமில்லை. தாயும், மக னும் காணப்படும் முடியிழந்த தோற்றமானது கன் னெஞ்சரையும் விடாது கதற வைத்துவிட்டது. எல் லாரும் அழுது கொண்டிருக்கும்போது எவர் அமர்த்து வார் அழுகையை? பரமதேவ தாயைத் தவிர யாருமில்லை.

அவளே, அத்தேவ தாயே, அம்மா சர்க்கரசியே மக்களின் அழுகையையமர்த்தினாள். அற்புதம், அற்புதம், சில வினாடிகளுக்குள் எங்கும் நிர் சப்தமாகிவிட்டது. எல்லா ரும் முழந்தாளிட்டனர். தேவதாய்க்கும், அவளது திரு க்குமாரனுக்கும் நேர்ந்து போன நிந்தைக்குப் பரிகார மாக ஐம்பத்து மூன்று மணிச் செபமும், மிகவும் இரக்க முள்ள தாயே என்ற ஜெபமும் ஜெபிக்கப்பட்டது.

ஊருங்கா லும் ஒடுங்கியநேரம், மானிட வியாபக மொதுங்கியவேளை ; வியாகூலமானது இருதயத்தை ஊ டறுத்துக்கொண்டிருக்கும் சமயம், கண்ணீர் ப்ரவாகம் சுனையினின்று மெழுந் தாற்போல் பொங்கித் தாரை தா ரையாய் வடிந்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பம், இத் தருணத்தில் ஜெபிக்கப்படும் ஜெபமான து எத்தகைய உருக்கமும் பக்தியுமுடைத்தானதா யிருக்குமென்பதை யெடுத்துரைத்தல் இயலாத விஷயம்.