லான்சியானோவில் நடந்த நற்கருணைப் புதுமை!

ஏறத்தாழ கி.பி. 700 ஆம் ஆண்டில், இத்தாலியில் லான்சியானோ நகரிலுள்ள அர்ச்சியசிஷ்ட லெகான்தியான் ஆலயத்தில் இலத்தீன் வழி திருப்பலி நிறைவேற்ற ஒரு பேசிலியன் குருவானவர் நியமனம் செய்யப்பட்டார்.

அவருக்கு புளியாத அப்பத்தில் இயேசுவின் திருவுடல், திருஇரத்த எழுந்தேறும் என்பதை நம்புவதில் சிரமம் இருந்தது. அவர் திருப்பலியில் அர்ப்பண வார்த்தைகள் (இது என் உடல், இது என் இரத்தம்) கூறுகையில், அவை அப்பம் உயிருள்ள உடலாகவும், திராட்சைப்பழ இரசம், ஒழுங்கற்ற வடிவமும், வெவ்வேறு அளவும் கொண்ட ஐந்து திவலைகளாய் திரண்ட உயிருள்ள குருதியாக மாறுவதைக்கண்டர். (ஐந்து என்பது இயேசுவின் திருக்காயங்களின் எண்ணிக்கை, அதன் வழியாகத்தான் பெருவாரியான இரத்தம் வெளியேறியது).

அவர் குழப்பமும், அச்சமும் கொண்டவராய், சற்று நேரம் தெய்வீக மெய்மயக்கத்ததில் நின்றார். ஆனால் சற்று நேரத்தில் அவர் திருவழிபாட்டு குழுவினர் பக்கம் தன் முகத்தை திரும்பி "நமதன்பு இயேசு கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் பாருங்கள்" என்று கூறினார். அந்த வார்த்தையைக் கேட்ட திருவழிபாட்டினர் பீடப்பகுதிக்குள் ஓடிவந்து கடவுளின் இரக்கத்தை இரஞ்ச ஆரம்பித்தனர். அந்த புதுமை புளிக்காத அப்பம் (Unleavened bread) புனிதப்பலிக்கு ஏற்ற பொருள் என்பதை அவருக்கு நிரூபித்தது.

சில ஆண்டுகளுக்குப் பின் மற்றொரு பேசிலியன் துறவி, பங்கு ஆலயத்தின் ஆவணம் பேணும்(Archives) பகுதியிலிருந்த இது தொடர்பான ஆவணத்தை திருடிவிட்டார்.

1574 ஆம் ஆண்டிலிருந்து பல தேவாலயப் புலனாய்வுகள் இந்த புதுமையில் மேற்கொள்ளப் பட்டுவிட்டன. இந்தப் புதுமைக்கான ஆதாரங்கள் இன்றுவரை லான்சியானோவில் உள்ளது. உடற்கூறியியல்(Anatomy), நோய்க்கூறு அறிவியல்(Pathology), நுண்ணுடற்க்கூறியல்(Histology), வேதியியல் மற்றும் மருத்துவ நுண்ணோக்கியல்(Clinical Microscopy), இவைகளில் பேராசிரியரான, பேராசிரியர் ஒடோர்டோ லிநோலி(Odoardo linoli) மற்றும் siena பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், ரக்கேறோ பெர்ற்றெலி (Roggero Berteli) இப்புதுமையில் அறிவியல் புலனாய்வுகளை மேற்க்கொண்டனர். அதன் அறிக்கை 1971 ஆம் ஆண்டில் “Querdeni Scalvo di Diagnositica clininca e di Laboratori”ல் வெளியிடப்பட்டு, உலக நல அமைப்பு (World Health Organization) ன் உயர் வாரியத்தால் நியமனம் செய்யப்பட்ட அறிவியல் குழுவினால் மறு ஊர்சிதப்படுத்தப்பட்டது. அதன் முடிவுகளாவன:

1. இப்புதுமையின் தசை உண்மையான தசை இரத்தம் உண்மையான இரத்தம்.

2. இந்த தசையும் இரத்தமும் மனித பிரிவினை சார்ந்தது.

3. இந்த தசை இதய நார்த்தசையைக் கொண்டுள்ளது, இது போலியாயிருப்பது மிகுந்த அசாத்தியம், அதாவது மிக அதிக சிரமத்துடன் தலை சிறந்த வல்லுனர்களால் மட்டுமே இதை செய்ய முடிந்திருக்கும். (அக்காலத்தில் அந்த அளவிற்கு அறிவியல் வளர்ச்சி இல்லை).

4. இந்த தசையில், மையோகார்டியம், என்டோகார்டியம், வேகஸ் நரம்பு மற்றும் பருத்த மையோகார்டியும் தடிமனில் இடது வெண்ட்ரிக்கிளும் இருக்கின்றன. இந்த தசையானது இதன் இன்றியமையாத கட்டமைப்பின் படி ஓர் இதயம்.

5. இந்த தசையும், இரத்தமும் ஒரே இரத்த பிரிவை (AB ஐ) ப்பெற்றுள்ளன. இயேசுவின் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட இயேசுவைப் பொதிந்த துணி மற்றும் மற்ற நற்கருணைப் புதுமைகளிலும் காணப்படும் இரத்தப் பிரிவும் இதுவே.

6. சாதாரணக் குருதியில் உள்ளதைப் போன்று சரியான விகிதாச்சாரங்களில் புரதங்கள் இந்தக் குருதியிலும் உள்ளது.

7. குளோரைடுகள், பாஸ்பரஸ், மெக்னீசியாம் , பொட்டாஷியம், ஸோடியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் காணப்படுகின்றன.

8. இந்த இரத்தம் அல்லது தசையை கெட்டுப்போகாமல் காப்பதற்குப் பொருட்களோ அல்லது காரணிகளோ பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஒரு தடயமும் இல்லை (பயன்படுத்தப்படவில்லை).

இந்த புதுமையை (அற்புதத்தை) இன்றும் காணலாம். இன்று இலத்தீன் தேவாலயங்களில் பயன்படுத்தப்படும் பெரிய அப்பத்தின் அளவிலான இந்த அப்ப-தசை, நார் பொருளாகவும்(fibrous), இளம் பழுப்பு நிறத்திலும், பின்புறமிருந்து ஒளியூட்ட இளஞ்சிவப்பு நிறத்தையும் அடைகிறது. இரத்தமானது ஐந்து திரண்ட திவலைகளாக களியுடன் கலந்த இரும்புத்துருவின் பழுப்பு நிறத்தில் உள்ளது.