அர்ச். வனத்துச் சின்னப்பர் பிரார்த்தனை

(திருநாள் : ஜனவரி 15)

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அடவியின் தபசியான அர்ச்சியசிஷ்ட வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மலைகளிலும் கடின தபசு பண்ணினவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசாசுகளை விரட்டுகிறவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எஜிப்து தேசத்தைச் சேர்ந்த கீழ்த்தொபாயீதென்கிற நாட்டில் பிறந்தவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திரவிய சம்பன்னரான தாய் தகப்பனிடத்தில் பிறந்தவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகுந்த திரவியத்தைச் செலவுசெய்து மிக்க சிரமத்தோடு கல்வி சாஸ்திர சூட்சம் அறிவைப் படித்துச் சிறந்த சாஸ்திரியான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிறுவயது துவக்கி உண்மையான பக்தியோடு சத்தியவேதத்தை அனுசரித்தவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமக்குப் பதினைந்து வயது நடக்கிற பொழுது உமது தகப்பன் சர்வேசுரனது சித்தத்தினால் இறக்க, தனிமையாய் நின்றவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிறு வயது துவக்கித் தெய்வ பக்தியிலும், சாந்த குணத்திலும், மரியாதையிலும், கிறீஸ்தவ னுக்குரிய மற்றப் புண்ணியங்களிலும் நாளுக்கு நாள் வளர்ந்து ஓங்கினவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கி.பி. இருநூற்றைம்பதாம் வரு­த்தில், தேஸ் என்னும் இராயன் காலத்திலே, கிறீஸ்தவர் களுக்கு வரும் துன்பங்களுக்குத் தப்பித்து, ஓர் அன்னியன் வீட்டில் ஒளிந்து கொண்டவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது மைத்துனன் உம்முடைய  ஆஸ்தியை அபகரிக்க வேண்டும் என்றெண்ணி, உம்மைச் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்க முயற்சி செய்ததை அறிந்து, நாட்டை விட்டுக் காட்டுக்  குப் போனவராகிய அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்தக் காட்டின் மலையடிவாரத்துக் குகை யில் வாசலை மூடியிருந்த கல்லைப் புரட்டி, அதிலிருந்து தவம் செய்தவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அந்தக் குகையைச் சூழ்ந்திருந்த ஈச்சமரத்தின் இலைகளைப் பின்னி ஆடையாகத் தரித்துக் கொண்டவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது புசிப்புக்கு அந்த ஈச்சமரக் கனியையும், தாகத்துக்கு மலையடிவாரத்தில் உண்டான சுனை நீரையும் சர்வேசுரன் உமக்காக நியமித்தார் என்று யோசித்து அவரைத் துதித்தவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது இளமையாகிய இருபத்திரண்டு வயதில் கலாபம் முடியுமட்டும் தவம் செய்ய விரும்பின வரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இரவும் பகலும் நீர் செய்த செபத்திலும் தவத் திலும் உபவாசத்திலும் ஏகாந்தத்திலும் வரும் மனோரம்மியத்தையும், மேலான பாக்கியத்தையும் உமது ஞான பரீட்சையால் கண்டு, உலகத்தை முற்றும் துறந்து, அந்தக் குகையில்தானே சீவனெல் லாம் செலவழிக்கத் தீர்மானித்தவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முதல் வனவாசியான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நாற்பத்து மூன்றாம் பிராய பரியந்தம் நீர் ஈச்சங்கனியினால் பசியாற்றினதையும், ஆழ்ந்த தியானத்தில் நாள் கழித்ததையும் கண்ட சர்வேசுரன், தமது தாசரான தீர்க்கதரிசியாகிய எலியாஸ் என்பவருக்குத் தந்த மேரையாய் காக்கையின் மூலமாக ஒவ்வொருநாளும் அனுப்பிய அரை அப்பத்தினால் பசியாற்ற வரம் பெற்ற அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது தவத்தையும் தியானத்தையும் தொண் ணுVறு வரு­மாக ஏக சர்வேசுரன் ஒருவரே அறியத் தவம் செய்தவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உமது தபசின் அருமையை உலகம் அறியும் பொருட்டு, தான் தவத்தில் மிஞ்சினவரென்று அர்ச். வனத்து அந்தோனியாருக்கு ஒரு தந்திர நினைப்பு வந்த சமயத்தில், உமது மேன்மையைச் சர்வேசுரன் அவருக்குச் சொப்பனத்தில் காட்ட வரம்பெற்ற அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சூரியன் உதயமானபோது அர்ச். வனத்து அந்தோனியார் நீர் இருக்கும் வனத்தைத் தேடி வருகையில், பசாசு நரரூபமாகவும், மிருகத்தைப் போலவும் பயங்கரமான பூத ரூபங்கொண்டு தோன்றினபோது, அவர் பயப்படாமல் தைரியங் கொண்டு சிலுவையடையாளத்தை வரையவே, உம்மிடம் சேரும் வழியைக் காட்டிப் பசாசு  மறைய வரம் பெற்றவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இரண்டு நாள் முழுவதும் அவர் நடந்து, ஓர் இராத்திரியயல்லாம் செபத் தியானம் செய்து, மலை அடிவாரத்தில் தண்ணீர் குடிக்க வந்த ஓநாயைப் பின்பற்றி, உமது குகையருகே வந்து சேர வரம் பெற்றவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குகையில் அவர் நுழைந்த மாத்திரத்தில் மனித அரவமில்லாததால், தூரத்திலிருந்த விளக்கைக் கண்டு சந்தோஷத்தோடு வேகமாய் நடந்த சத்தத்தை நீர் கேட்டு, உமது வாசலை மூடிக் கொண்டவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். அந்தோனியார் காலை முதல் மத்தி யான மட்டும் மிகுந்த தாழ்ச்சியோடு மன்றாடி, உம்மை நான் பார்க்க பாத்திரவானல்ல என்றா லும், உம்மைப் பாராமல் போகிறதைப் பார்க் கிலும் இங்கேதானே இறந்து போவேன் என்ற சத்தம் கேட்டு மனமிரங்கின அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். அந்தோனியார் கொண்ட விசுவாசத் தையும், உமது பேரில் சுமத்திய பெரும் பாரத் தையும் கண்டவுடனே கதவைத் திறந்தவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஒருபோதும் அறியாத அர்ச். அந்தோனியார் பேரை சர்வேசுரனுடைய சித்தத்தினால் அறிந்து, அவரைப் பெயரிட்டு அழைத்தவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய நாமத்தையும் அர்ச். வனத்து அந்தோனியார் தெய்வ வரத்தால் உச்சரித்த மாத் திரத்தில், அவரோடு ஏகோபித்து, ஏக சர்வேசுர னைத் தோத்தரித்த அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வழக்கப்படி அரை அப்பம் கொண்டு வரும் காகம், அன்று சர்வேசுரனுடைய ஏவுதலினால் முழு அப்பம் கொண்டுவர வரம் பெற்றவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போது அர்ச். அந்தோனியாரை நோக்கி, “சுவாமியுடைய தயையைப் பாரும்;  நீர் வந்த தைப் பற்றி தம்முடைய ஊழியர்களுக்கு இரட் டிப்பான அன்னம் தந்தார்” என்று சொன்னவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

“எனது அந்தியகாலம் சமீபித்தபடியினால் தயாசொரூபியான சர்வேசுரன் கிருபைகூர்ந்து என்னை அடக்கம் செய்ய உம்மை அனுப்பினார்” என்று சொன்னவரான அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அலெக்சாந்திரியா பட்டணத்தின் மேற்றி ராணியாரான அர்ச். அத்தனாஸ் என்பவரால் அர்ச். அந்தோனியாருக்கு ஒரு கம்பளம் தரப்பட்டதை ஞான திருஷ்டியால் கண்டு, அதனால் உம்மைப் பொதிந்து அடக்கம்செய்ய அவரைக் கேட்டுக் கொண்டபோது, அவர் உம்முடைய ஞானகாட்சி யின் மகத்துவத்தால் ஆச்சரியப்படச் செய்தவ ராகிய அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். அந்தோனியார் உம்முடைய மரண காலம் குறுகினதை அறிந்து துக்கித்து, இரண்டு நாளில் தமது மடத்திற்குச் சென்று அந்தக் கம்பளத்தை எடுத்துக் கொண்டு பிரயாணப்பட்ட மறுநாள் காலையில், சம்மனசுகளும், தீர்க்கதரிசி களும், அப்போஸ்தலர்களும் புடைசூழ மோட்சத்திற்கு ஆரோகணமாகிறதாய் அவர் காட்சியில் காணப்பட்டவராகிய அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவர் இந்தக் காட்சியைக் கண்டவுடனே சாஷ்டாங்கமாக விழுந்தெழுந்து, வேகத்துடன் குகையில் வந்து உம்மைப் பார்க்கும்போது, முழங் கால்படியிட்டபடியே வானத்தை நோக்கிய கண்ணும் உயர்த்திய கையுமாயிருக்கக் கண்டு, தியானத்தில் இருக்கிறதாய் எண்ணப்பட்டவ ராகிய அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுவாசமில்லாமல் இருக்கிறதைக் கண்டு மரித்திருக்கிறீர் என்று அறிந்து அவர் கொண்டு வந்த கம்பளத்தால் உம்மைப் பொதிந்து, சங்கீதப் பாடலோடு வெளியில் கொண்டுவரப்பட்டவ ராகிய அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இரண்டு சிங்கங்கள் உமக்குக் கல்லறை தோண்ட வரம் பெற்றவராகிய அர்ச். வனத்துச் சின்னப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி!  தவசியான அர்ச். வனத் துச் சின்னப்பர் அகோரமான தபசு செய்து அனுசரித்த புண்ணியங்களினாலே மோட்சத்திற்கு எழுந்தருளித் தேவ தரிசனம் அடைந்து, ஆனந்த பாக்கியம் அனுபவிக்கப் பாத்திரமானாரே;  அவரைக் கொண்டு உம்மை மன்றாடுகிற நாங்களும் அவருடைய தர்ம மாதிரிகையினாலே தேவரீர் தருகிற நல்ல விசாரங்களைத் தாற்பரியத்துடனே பற்றிக் கொண்டு, உம்முடைய கற்பனையை மீறாமல் புண்ணிய வழியில் நடந்து அவரோடு கூட மோட்ச இராச்சியம் அடைய எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமி.  பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சதாகாலம் சீவியரும் நித்திய இராச்சியபாரம் செய்கிறவருமாயிருக்கிற ஆண்டவரே. 

ஆமென்.