குழியில் வைத்தவுடனே சொல்லுகிற ஜெபம்

சுவாமி கிருபையாயிரும்.

கிறீஸ்துவே கிருபையாயிரும்.

சுவாமி கிருபையாயிரும்..

பரலோக மந்திரம்.

சுவாமி!  தேவ திருவுளத்தைப் பக்தியோடு அங்கீகரித்திருந்த இவன்(ள்) தன் குற்றங்களுக்கேற்ற ஆக்கினை அனுபவியாமல் மன்னிப்பை அடையவும், வானோர்களோடு கூட மோட்ச இராச்சியத்தில் நிரந்தரம் உமக்கு ஸ்துதி புரியவும், மரித்த உம்முடைய அடியானா(ளா)கிய இவனுக்குக் (இவளுக்குக்) கிருபை கூர்ந்தருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுகளையெல்லாம் சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும்.  

ஆமென்.

சுவாமி! இவனு(ளு)க்கு முடிவில்லாத காலத்தின் பேரின்ப சுகத்தைக் கட்டளையிட்டருளும்.  நித்திய காலத்தின் பிரகாசம் இவனு(ளு)க்குப் பிரகாசிக்கக் கடவது.

சுவாமி கிருபையாயிரும்.

கிறீஸ்துவே கிருபையாயிரும். 

சுவாமி இவன்(ள்)மேல் தயையாயிரும்.

பரலோக மந்திரம்...

(தீர்த்தம் தெளிக்கவும்.)