இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாலை ஆராதனைக்குரிய செபம்.

ஆண்டவரே, எங்கள் அந்தகாரம் நீங்க வெளிச்சம் தந்து இந்த இராத்திரியில் நேரிடும் சகல மோசங்களுக்கும் பயங்கரங்களுக்கும் உமது மிகுந்த இரக்கத்தினால் எங்களை விலக்கிக் காக்க வேண்டுமென்று, உம்முடைய ஒரே குமாரனும் எங்கள் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் அன்பினிமித்தம் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

இரக்கம் நிறைந்த கடவுளே, கடந்துபோகிற உலகத்தின் மாற்றங்களினாலும் சந்தர்ப்பங்களினாலும் தொய்ந்துபோன நாங்கள் உம்முடைய நித்திய மாறாமையில் ஆறுதலடையத் தக்கதாக, இந்த இரா முழுவதும் எங்களுடன் கூட இருந்து எங்களைக் காத்தருளும்படி எங்கள் ஆண்டவராகிய நித்திய இரட்சகர்மூலம் வேண்டிக் கொள்ளுகிறோம்.

ஆமென்.