காலை ஆராதனைக்குரிய செபம்.

எங்கள் பரமபிதாவும் சருவ வல்லமையுமுள்ள நித்திய கடவுளுமாகிய ஆண்டவரே, எங்களுக்கு ஒரு ஆபத்தும் நேரிடாமல் இந்நாள் வரைக்கும் எங்களைக் காத்தீர்; இந்நாளிலும் உமது மகா வல்லபத்தினால் எங்களைக் காப்பாற்றியருளும்; நாங்கள் யாதொரு பாவத்திலும் விழாமலும், எவ்விதமான மோசத்திலும் அகப்படாமலும், நாங்கள் செய்வதெல்லாம் உம்முடைய ஆளுகையினால் நடத்தப்பட்டு உமது சமுகத்திற் செவ்வையாய் விளங்கும்படி எங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தம் தயை செய்தருளும்.

ஆமென்.