புது வருஷ செபம்.

அழிவில்லாதவரும் நித்தியருமாகிய ஆண்டவராகிய கடவுளே, அபாத்திர அடியார்களாகிய எங்களை இன்னொரு வருஷத்தின் துவக்கத்திற்குக் கொண்டுவரச் சித்தங் கொண்டீரே. எங்கள் கடந்த கால மீறுதல்களை மன்னித்து, எங்கள் ஜீவநாளெல்லாம் எங்களோடு தங்கியருள வேண்டுமென்று உம்மைத் தாழ்மையாய் மன்றாடுகிறோம். எங்களுக்கு நேரிடும் சகல துன்பங்களிலும் சோதனைகளிலும் எங்களைப் பாதுகாத்து வழிநடத்தி நாங்கள் வயதில் வளருகிறதுபோற் தேவரீருடைய ஆசீர்வாதத்தால் கிருபையில் வளர்ந்தேறவும், கடைசியில் எங்கள் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடு முடிக்கவும் கிருபை செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.

ஆமென்.