இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பத்தாம் செபம்

சர்வத்திற்கும் முதலும் முடிவுமாய் உண்மையும் வழியுமாயிருக்கிற சேசுவே! தேவரீர் உமது உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால்வரை பட்ட பாடுகளின் கரைகாணாத உபத்திரவக் கடலில் மூழ்கிப் போனதை நினைத்தருளும் சுவாமி. ஆ, என் ஆண்டவரே! உமது காயங்களின் மகத்துவத்தைப் பார்த்து அடியேன் பாவக்கடலில் கல்நெஞ்சனாய் அமிழ்ந்து போகாதபடி உண்மையான சிநேகத்தால் நான் உமது கற்பனையை அநுசரிக்கக் கற்பித்தருளும் சுவாமி.

ஒரு பர., அருள்., திரி. ஆமென்.