இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

9. குரு கோதுமை அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் ஒப்புக் கொடுக்கிற போது


யூதர்கள் சுவாமியை பிடிக்க கருத்தாயிருந்த சமயத்திலே, அவர் ஜெருசலேமென்கிற பட்டணத்தை விட்டு மறைந்து வேறு ஊர்களில் சஞ்சரித்தாரென்பதை நினைத்துக் கொள்.

சுவாமி! எங்களாலே தேவரீருக்குப் பூசையும் தோத்திரமும் உண்டாகிற நாளளவும் பொல்லாதவர்கள் எங்களை உபாதித்து உம்முடைய பூசைக்கும் தோத்திரத்துக்கும் விக்கினம் பண்ணாதபடி காத்தருள வேணுமென்று தேவரீரை வேண்டிக் கொள்கிறோம்.

ஆமென்.