8. குரு பீடத்தின் நடுவிலே நின்று விசுவாச மந்திரம் சொல்லுகிறபோது.


சேசுநாதருடைய சீஷர்கள் உலகமெங்கும் சுற்றித் திரிந்து சுவிசேஷத்தை போதிக்க, அதைக் கேட்ட அநேகமாயிரம் பிரஜைகள் பசாசின் ஆராதனையை விட்டுச் சத்திய வேதத்தை விசுவசித்தார்கள். நாமும் பக்தியோடு நம் விசுவாச மந்திரத்தைச் சொல்லுவோம்.

சுவாமி! பாவிகளாயிருக்கிற அடியோர்கள் பேரில் உமது கிருபையைத் தானே பாராட்டி அடியோர்களுக்கு உமது சத்திய வேதத்தை அறிவிக்க திருவுளமானீரே! நாங்கள் அப்படிப் பட்ட சத்திய வேதத்தை விசுவாசம் நம்பிக்கை தேவசிநேகத்தோடே கைக்கொண்டு அதன்படியே சுமுத்திரையாக நடந்து மோட்சத்தை அடையக் கிருபை செய்தருள வேணுமென்று அநாதி பிதாவை வேண்டிக் கொள்ளுகிறோம்.

ஆமென்.