உத்தரிய மாதா பிரார்த்தனை.

சுவாமி, கிருபையாயிரும் 2.
கிறிஸ்துவே, கிருபையாயிரும் 2.
சுவாமி, கிருபையாயிரும் 2.

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.

பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வ காலத்திற்கு முந்தி அநாதி பிதாவின் திருவுளத்தில் உற்பவமான உத்தமியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவதரித்த தேவ சுதனை ஈன்ற திருக்கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தூய ஆவியினோடே பரிசுத்த நேச பந்தனமான கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித தமத் திருத்துவத்தின் உன்னதமான தேவாலயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல சிருஷ்டிப்புகளிலும் பிரதானமும் மேன்மையுமான ஆண்டவளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆதித் தகப்பனால் வந்த தோஷமணுகாத சுந்தரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நரகசர்ப்பத்தின் நசுக்குகிறவளாக ஆதியில் தெரிவிக்கப்பட்ட பரமநாயகியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மோயீசன் கண்ட அக்கினிக்குள் வேகாத அற்புத முட்செடியால் குறிக்கப்பட்ட கன்னித்தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வரிவேதத்தில் அனேக முறை முன்னறிவிக்கப்பட்ட பரமநாயகியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவகிருபையின் ஆலோசனை நிறைவேற எத்தனமான கருணாகரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மூவாறு கிரீடாதிபதிகளுடைய சந்ததியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ வரப்பிரசாதம் நிறைந்த சுகிர்த அலங்காரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா பற்றுதலான மன்றாட்டினால் உலக இரட்சணியத்தை தீவிரித்த உத்தம வீரத்தியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரம கர்த்தர் கீழ் பணிந்து வணங்கின மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நேரம் வரும் முன்னே இயேசு நாதரால் அற்புதத்தைச் செய்வித்த தயாபரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இயேசு நாதர் எங்களை இரட்சிக்கும் பொருட்டு இரத்தப் பலியாவதற்கு உத்தரவு தந்த தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உயிர்த்து எழுந்தருளின கர்த்தரின் தரிசனையால் ஆனந்த சந்தோஷம் அடைந்த தயாபரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ நற்கருணையின் தாயும் தேவாலயமுமான கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

படைக்கப்பட்ட சகல வஸ்துக்களையும் விட சர்வேசுரனுக்கு மிகுதியான தோத்திரம் வருவித்த உத்தம உத்தமியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரம கர்த்தர் பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஏற்படுத்தின ஏக அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வலோகத்திலும் தோத்திரமும் நமஸ்காரமும் பெற்ற சுகிர்த செல்வியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பூர்வீகம் துவங்கி கார்மேல் என்னும் மலையில் தீர்க்கதரிசியான விசேஷபக் திவணக்கத்துடன் சேவிக்கப்பட்ட ஆண்டவளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கார்மேல் சபையின் பேரில் கிருபை அருளும் அன்புள்ள மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அதன் சிரேஷ்டரான சீமோன் ஸ்தோக் என்பவருக்குத் தரிசனையாகித்திரு உத்தரியத்தைத் தந்தருளின மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திரு உத்தரியத்தின் மூலமாக ஆச்சரியத்துக்குரிய அநேக அற்புதங்களைச் செய்தருளின கருணா கரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திரு உத்தரியத்தை உம்முடைய ஊழியர்களுக்கு விசேஷ விருந்தாக நியமித்தருளின இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திரு உத்தரியத்தை பக்தியுடன் தரிசிக்கிற கற்புள்ளோர்களின் பேரில் அத்தியந்த கிருபை நேசமுள்ள மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இவ்வுலகில் பக்தியுள்ள உம்முடைய உத்தரியச் சபையாரை நன்மை வரப்பிரசாதங்களினால் பூரிப்படைய செய்கிற ஆண்டவளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பக்திப் பிரமாணிக்கத்துடன் திரு உத்தரியத்தைத் தரிக்கிரவர்களை நரகத்தில் விழவொட்டாத தயாபரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கும் உத்தரிக்கிற சபையாருக்கு இளைப்பாற்றியையும், மோட்ச பேரின்பத்தையும் தீவிரமாய்ப் பெறுவிக்கிற உபகாரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பேரின்ப இரசமுள்ள உத்தரிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சீவிய கனியைத் தந்த திரு விருட்சமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தயாபமுள்ள இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிருபையின் தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆனந்த மதுரமுள்ள கருனாகரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இப்பிரபஞ்ச பிரதேசத்தின் ஆறுதலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்மை மன்றாடுகிரவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிற உபகாரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனுமக்களின் இடையூறுகளின் பேரில் அனந்த இரக்கமுள்ள தயாபரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது பேரில் பக்தியுள்ளோருக்காக தேவ சந்நிதியில் அனுகூலமாக மனுப்பேசுகிற தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கர்த்தரிடத்தில் அத்தியந்த வல்லபம் பெற்ற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தரித்திரருக்கு உதவி ஆறுதலான தரும பூரணியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

துன்பப்படுகிறவர்களுக்குத் தயாபரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நல்லோர்களுக்கு நற்கருணையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்மை நம்பி வேண்டுகிறவர்களைக் கைவிடாத தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பசாசின் தந்திரங்களில் திடமான ஆதரவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனந்திரும்புகிற பாவிகளுக்கு அடைக்கலமாகிய தயாபரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகலருக்கும் அவசரமான ஆதரவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இரட்சணியத்தின் நிச்சயமான துறையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுக்கும் மனிதருக்கும் உதவி செய்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னிசுத்தத்தின் உத்தம நெறியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல புண்ணியங்களுக்கும் உத்தம மாதிரிகையான அமலியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல நன்மை வரப்பிரசாதங்களின் பரம வாய்க்காலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அடியோர்களுக்குச் சீவிய காரணமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பூவுலகத்தின் நிச்சயமான நம்பிக்கையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வானுலகத்தின் ஆச்சரியமான அலங்காரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குளிர்மதியை இணைத்தாளமிதித்த நல்ல பரம நாயகியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பன்னிரண்டு வானுலகைச் சோதி மகிமை முடியாகத் தரித்த இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செங்கதிரோனை உத்தரியமாக அணிந்த பேரின்ப சௌந்தரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பதிதர்களுக்கு எதிர்ப்படையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பதித்த மதங்களை நிர்மூலமாக்குகிற சக்தியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பசாசின் தலையை நசுக்கி சத்துருக்களைஎல்லாம் ஜெயித்து விலக்கும் சக்தியுடைத்தான நாயகியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உத்தரிப்புச் சபையின் அவதியை குறைத்துத் தீர்க்கிற பரம உபகாரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

யுத்தச் சபையின் உறுதித் தரிசனமாகிய ஆண்டவளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜெயசீலசபையின் மகிமை அலங்காரமான இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் பூர்த்தியான சந்தோசமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சம்மனசுக்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிதாப்பிதாக்களின் நம்பிக்கையான நாயகியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்ட கன்னித்தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலர்களுக்கு ஆனந்தமான துணையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேதசாட்சிகளுக்குத் திடமான உறுதியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஸ்துதியர்களுடைய பிரகாசமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களுடைய அரசியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல புனிதர்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சுவாமி நாங்கள் இந்த ஸ்தலத்திலே இருந்து கூப்பிடுகிற சத்தம் தேவரீருடைய திருச்சந்நிதி மட்டும் வரக்கடவது.

செபிப்போமாக.

நித்திய பிதாவாகிய சர்வேசுரா சுவாமி! முத்திப்பேறு பெற்றவருமாய் பரிசுத்த கன்னிகையுமாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட உத்தரிய மாதாவின் வேண்டுதல்களைக் கேட்டு எங்கள் பேரில் கிருபை தயாபரராய் இவ்வுலகத்தில் எங்களுக்கு வேண்டிய நன்மை வரப்பிரசாதங்களையும் நாங்கள் இந்த பரதேசங்கடந்த பிற்பாடு உமது பிரத்தியட்ச தரிசனத்தையும் எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று தேவரீரை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்துடனே மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி!

ஆமென்.