இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உத்தமனஸ்தாபச் செபம்.

என் ஆண்டவரே! அளவில்லாத நேசத்துக்குப் பாத்திராய் இருக்கிற தேவரீருக்கு பொருந்தாத பாவங்களைச் செய்தபடியினாலே முழுமனதுடனே துக்கப்படுகின்றேன். இனிமேல் சுவாமி, தேவரீருடைய உதவியினாலே நான் ஒருபோதும் பாவம் செய்யேன் என்றும், பாவங்களுக்கடுத்த காரணங்களையெல்லாம் விட்டுவிடுவேன் என்றும் கெட்டி மனதுடனே வாக்குப்பண்ணுகிறேன். எங்கள் நாயகன் இயேசுக்கிறிஸ்து பாடுபட்டு அடைந்த மட்டில்லாத பேறுபலன்களைப்பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்தருளும் சுவாமி.

ஆமென்.