படுத்துக்கொண்டு சொல்லும் செபம்.

என் ஆண்டவரே! உம்மைப் போற்றுகிறேன். எனக்காகச் சிலுவையில் அறையப்பட்ட இயேசுக் கிறிஸ்து நாதரின் திரு நாமத்தின் பெயரால் நான் படுக்கைக்குச் செல்கிறேன். என் தேவனே! உம்மைத் துதிக்கிறேன். அடியேனை ஆசீர்வதித்து தற்காத்து ஆண்டருளும். அல்லாமலும் இந்த நிர்ப்பாக்கியம் நிறைந்த பரதேசத்தின் பின்பு என்னைச் சதாகால மோட்ச பாக்கியத்திற் சேர்த்தருள வேண்டுகிறேன்.

ஆமென்.