தேவ சம்பந்தமான புண்ணியங்களைக் கேட்டு மன்றாட்டு.

விசுவாசம்:
என் சர்வேசுரா சுவாமி! திருச்சபை விசுவசித்துக் கற்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப் பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன்.
ஆமென்.

நம்பிக்கை:
என் சர்வேசுராசுவாமி! தேவரீர் வார்த்தைப்பாடு கொடுத்திருக்கிறபடியினால், சேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன்.
ஆமென்.

தேவ சிநேகம்:
என் சர்வேசுராசுவாமி! தேவரீர் மட்டில்லாத சிநேகத்துக்குப் பாத்திரமாயிருக்கிறதினாலே எல்லாவற்றிக்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு சிநேகிக்கிறேன். மேலும் உம்மைப் பற்றி என்னை நான் நேசிக்கிறது போல மற்றெல்லாரையும் நேசிக்கிறேன்.

ஆமென்.