இதயக் கதவுகளை திறந்து வைத்து - நம் இயேசு இராஜனை அழைத்திடுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இதயக் கதவுகளை திறந்து வைத்து - நம்

இயேசு இராஜனை அழைத்திடுவோம்

இறைவா உமது வரவு நல்வரவு


1. கலிலேயா கடற்கரை ஓரமாய்

கற்பித்த தேவனே வந்திடுவீர்

கலங்கிய உள்ளம் போக்கிடுவீர்

கனிவுள்ள நெஞ்சம் தந்திடுவீர்


2. காரிருள் வேளையில் பிறந்தவரே

கல்வாரி மலையில் மரித்தவரே

காவலர் கலங்க உயிர்த்தவரே

காலங்கள் யாவும் கடந்தவரே