அன்பென்ற நதி மீது படகாகு அறியாத பேரின்ப கரை சேர்க்கும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அன்பென்ற நதி மீது படகாகு

அறியாத பேரின்ப கரை சேர்க்கும்

அன்பென்ற வில்லின் முன் இலக்காகு

அகம் எங்கும் படிந்துள்ள குறை நீக்கும்


1. வெயில் காய்ந்து நிழல் ஈயும் மரங்கள் போல்

துன்பங்கள் மறைத்தே இன்முகம் காட்டு

உயிர் காக்கும் காற்றும் கண் மறைதல் போல்

தனைக் காட்டும் குணம் நீக்கி நலம் நாட்டு

நெருப்புக்கு வலுவூட்டும் காற்றைப் போல்

பணிவேகம் தனில் இன்னும் பலம் ஊட்டு

அன்புக்கு ஈர்க்கின்ற மனம் உண்டு

இழந்தாலும் மகிழ்கின்ற குணம் உண்டு


2. மலர்வாசம் தரும் பூவில் இழப்பில்லை

மாண்பில் நீ மறைந்தாலும் குறைவில்லை

தானே தன் கனி உண்ணும் செடியில்லை

தனக்கென்று வாழ்ந்தால் விண் விடிவில்லை

இளகாத மனம் செய்த பணியில்லை

இரங்காத இதயத்தில் இறையில்லை

தன் துன்பம் பிறர் வாழும் உரமாகும்

அன்புள்ளம் இறை தந்த வரமாகும்