என்ன தவம் நான் செய்தேன் இறைவா உன்னை நான் அடைய

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்ன தவம் நான் செய்தேன் இறைவா

உன்னை நான் அடைய

முள்ளில் விழுந்தேன் உள்ளம் கிழிந்தேன்

அள்ளும் தாயன்பே நீ அன்பின் பேரன்பே

கண்ணின் மணிபோல் உன்னைக் காப்பேன்

கண்ணே கலங்காதே

கையில் பொறித்தேன் நெஞ்சில் முடிந்தேன்

கண்ணீர் வடிக்காதே என் கண்கள் உறங்காதே


1. தனித்து உடைந்து சிதறும் மனதைப்

புரிந்து கொள்ள ஆளில்லை

தூக்கிச் சுமக்கும் துயரம் யாவும்

இறக்கி வைக்கத் தோளில்லை

நம்பிக்கைகள் தகர்ந்த போது

தேற்றுத் தெளிய நாளில்லை

என்னை முழுதும் அறியும் உந்தன்

அன்பைப் பிரிந்தால் வாழ்வில்லை

அறிந்த மனங்கள் எரிந்து விடவே

தனித்து நொறுங்கும் இதயமே ஆ

விரிந்த உறவே முறிந்த சிறகாய்

எரிந்து வீழும் உன் உலகமே

புரிந்து கொள்வார் எவருமின்றி

கலங்கித் தவிக்கும் கண்களே

எந்தன் தோளில் தொட்டில் கட்டி

தூங்க வைப்பேன் செல்வமே

ஆரிராரோ ஆரிராரோ


2 பூமி விழுந்த மழையின் துளிபோல்

புனிதம் இழந்தேன் இயேசுவே

பூவில் பொலிந்த பனியின் துளி போல்

புனிதம் அருள்வாய் நேசனே

வெள்ளம் நடந்த பள்ளம் போல

வாழ்க்கையானது நாளுமே

அள்ளி அணைக்கும் அன்பின் அமுதே

உன்னருள் எனக்குப் போதுமே

தாங்கும் நிலம் நான் பாவச்சுமையால்

எங்கே விழுந்தும் ஏந்துவேன் ஆ

தூக்கிச் சுமக்கும் தேங்கி அழுத்தும்

பாவச் சுமைகள் வாங்குவேன்

ஊர்கள் உறங்கும் உலகம் உறங்கும்

விழித்து உன்னைத் தாங்குவேன்

உதிரும் பொழுதில் உயிர்ப்பின் ஒளியில்

உன்னைக் காண ஏங்குவேன்