இறையவனே அருள் உறவே உளமதில் வருவாயே வெண்மதியே தண்ணிலவே சுடரொளி பொழிவாயே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறையவனே அருள் உறவே உளமதில் வருவாயே

வெண்மதியே தண்ணிலவே சுடரொளி பொழிவாயே

ஒரு கணம் உனை அழைத்தேன் நீ குரல்தனைக் கேளாயோ

உன்னருகில் இருந்து நான் என்னுறவே நீ வா


1. உன்னிலன்றி உயிர் இல்லை

வாழ்வினில் செயல் இல்லை

தருவுடனே கிளை இணைந்து கனி தரவே வந்திடுவாய்

நீயின்றி நானில்லையே எனக்கேதும் உறவில்லையே

கொடியாக நான் படர்ந்து உறவாகவே வந்திடுவாய்


2. உலகையாளும் மெய்ப்பொருளே

தலமெல்லாம் பார்த்திருந்தேன்

பொழுதெல்லாம் உன் நினைவே எனையாள வந்திடுவாய்

எங்கேனும் வன்பகையே உள்ளத்தில் படர் வெறுமை

அளவில்லா உம்மன்பு நிரம்பிடவே வந்திடுவாய்