அருளே உன்னருகில் வாழ வேண்டும் அகிலம் அறநெறியில் வளர வேண்டும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அருளே உன்னருகில் வாழ வேண்டும்

அகிலம் அறநெறியில் வளர வேண்டும்

நின் பாதம் சரணடைந்து

நான் வேண்டும் வரங்களெல்லாம்

வறுமை இல்லாத உலகம் ஒன்றும்

வெறுமை உணராத வாழ்க்கை ஒன்றும்

அழிவுகள் இல்லாத எதிர்காலமும்

ஆயுதப் போர் இல்லா புதுபூமியும் - இறைவா

கங்கா நதி போல் அன்பின் வெள்ளம்

கரைபுரண்டோடிடும் காலமும் மலராதோ

கனவுகள் மெய்ப்படும் காட்சிகள் கனியாதோ


1. தூயமதி நின்று தீயநெறி நீக்கும்

ஞானஒளியும் வேண்டும்

எனக்காக நான் ஆசை கொள்பவை

எல்லோருக்கும் வேண்டும் கனிவான கண்மணியே

கனவுகள் மெய்ப்படுமோ இறைவா


2. உயிரில் கலந்துருகி உறவின் கவிதையென

உயரும் எனது பாடல்

என்ன நேரினும் உன்னை மறவாது

வாழும் இன்பம் வேண்டும் இருள் வந்து சூழ்ந்திடினும்

உன் கரம் என்னை வழிநடத்தும் இறைவா