சீயோனில் இறைவா உமக்குப் பாடல் இசைப்பது தகுதியே அங்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் தகுதியே என்றும் தகுதியே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


சீயோனில் இறைவா உமக்குப் பாடல் இசைப்பது தகுதியே

அங்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் தகுதியே என்றும் தகுதியே


1. மண்ணுலகைத் தேடி வந்தீர்

அதற்கு நிறைய மழை கொடுத்தீர்

ஆறுகள் நிரம்பச் செய்தீர்

தானியங்கள் விளையச் செய்தீர்

அடைசால்கள் எல்லாம் தண்ணீர் ஓடச் செய்தீர்

மண்ணைப் பரம்படித்து மழையால் மிருதுவாக்கினீர்


2. முளைத்து வரும் விதையை

ஆசீர்வதித்துக் காக்கின்றீர்

ஆண்டு முழுவதையும் கருணையாலே நிரப்புகின்றீர்

நீர் செல்லும் இடத்தில் செழுமை சிந்துதே

பாலை மேய்ச்சல் நிலம்

கொழுமை கொண்டு விளங்குதே