தாயும் நீயே என் தயவும் நீயே அருளும் வளமும் நிரம்பி வழியும் நிறைவாழ்வைத் தந்த என் தெய்வமும் நீயே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தாயும் நீயே என் தயவும் நீயே

அருளும் வளமும் நிரம்பி வழியும்

நிறைவாழ்வைத் தந்த என் தெய்வமும் நீயே


1. நான் செல்லும் இடமல்லாம் நீ முன்னே செல்கின்றாய்

கால்கள் இடறாமல் கைகளில் தாங்குகின்றாய்

என் துன்ப துயரினில் அருகில் நீ இருக்கின்றாய்

உடல் உள்ள நோய் தீர்த்து எந்நாளும் காத்து வரும்


2. என் செவி படைத்தவரே என் வேண்டல் மறுப்பாரோ

என் விழி திறந்தவரே எனைக் காண மறப்பாரோ

எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் அறிபவரே

உம் சித்தம் வாழ்கையில் நிறை ஆசீர் பெருகுமே