♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
கோடி கோடி நன்றிகள் பாட்டுப் பாடுவேன்
இராஜாதி இராஜனுக்கு இசை மீட்டுவேன்
1. நல்லவர் நல்லவர் என்று பாடுவேன்
தீமைகளை நன்மையாக மாற்றிடுவாரே
வல்லவர் வல்லவர் என்று பாடுவேன்
அரிய பெரிய செயல்களைச் செய்திடுவாரே
2. மருத்துவர் மருத்துவர் என்று பாடுவேன்
நோய்களையெல்லாம் அவர் குணமாக்குவார்
துணையாளர் துணையாளர் என்று பாடுவேன்
வழிகளிலெல்லாம் அவர் காத்திடுவாரே
3. தூயவர் தூயவர் என்று பாடுவேன்
தூய்மையான வாழ்வையே தந்திடுவாரே
இனியவர் இனியவர் என்று பாடுவேன்
இனிதாக யாவையும் ஈந்திடுவாரே