உலகாளும் தேவா உள்ளத்தின் தலைவா உம்மையே வணங்கினோம் உம்மருள் தாருமய்யா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உலகாளும் தேவா உள்ளத்தின் தலைவா

உம்மையே வணங்கினோம் உம்மருள் தாருமய்யா


1. நிலையான உம் அன்பு நினைவினில் வேண்டும்

நின் வரம் யாம் பெற வேண்டும்

நலமே எமக்கு நல்கிடும் இறைவா

நல்மனம் தா நிறைவாய் எமக்கு

நல்மனம் தா நிறைவாய்

நீரே முன் சென்றிடவே நிதமும் பின்தொடர்ந்திடவே

நல்ல வழியிலே மெல்ல நடக்கவே

நாங்கள் மகிழ்வோம் நடனம் ஆடியே


2. இயல்பான வாழ்வோ இடமாறும் போது

இனிமை தனிமையில் ஏது

உந்தன் உறவு நீங்காது நிலைத்து

உயிர்காக்கும் மருந்தாகு எமக்கு

உயிர்காக்கும் மருந்தாகு