இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது

சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது


1. கடலினைச் சென்று சேராமல் நதிகள் அடங்காது

உடலெனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது

ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது

உன்னைக் கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது

இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது


2. உயிர்தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது

தாங்கிடும் செடிகள் இல்லாமல் கொடிகள் படராது

கரங்களைப் பிடித்து நடக்காமல் பாதையில் பலமேது

சிறகதன் நிழலில் அமராமல் ஆறுதல் எனக்கேது

இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது