இயேசுவின் கரங்களில் நான் தவழ்கின்றேன் இனி என்ன கவலை கேட்பதை எல்லாம் கொடுத்திடும் இயேசு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவின் கரங்களில் நான் தவழ்கின்றேன் இனி என்ன கவலை

கேட்பதை எல்லாம் கொடுத்திடும் இயேசு

இருக்கையில் ஏன் கவலை


1. என் தேவை என்னவென்று படைத்தவர் அவர் அறிவார்

என்னையே நான் கொடுத்துவிட்டேன் அவரே பார்த்துக் கொள்வார்


2. என் இதயம் கவலையினால் மிகுந்திடும் வேளையிலே

ஆண்டவர் தம் ஆறுதலால் இன்பத்தில் ஆழ்த்துகிறார்


3. உம் வழியில் என் கால்கள் தள்ளாடும் நேரத்திலே

ஆண்டவரே உன் அருளே என்னைத் தாங்கிடுதே