என் இறைவா என்னரசே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் இறைவா என்னரசே

உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்

மான்கள் நீரோடை ஆர்வமாய் நாடுதல் போல்

இறைவா என் நெஞ்சம் உம்மை நாடிடுதே


1. அடைக்கலான் குருவிக்கு வீடும் கிடைத்தது

தகைவிலான் குஞ்சுக்கு கூடும் கிடைத்தது

ஆனால் இறைவா என்னரசே

எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்தது

எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்துள்ளது


2. வறண்ட பாலைக்கு நீரும் கிடைக்கும்

ஏங்கும் நெஞ்சுக்கு வார்த்தையும் கிடைக்கும்

ஆனால் இறைவா என்னுயிரே

நீயின்றி எனக்கு வாழ்வெங்கு கிடைக்கும்

நீயின்றி எனக்கு வாழ்வு எங்கு கிடைக்கும்