உமது வல்லமை புகழ்ந்து பாடுவேன் காலைதோறும் உமது இரக்கம் நினைந்து மகிழுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உமது வல்லமை புகழ்ந்து பாடுவேன்

காலைதோறும் உமது இரக்கம்

நினைந்து மகிழுவேன்

ஏனெனில் நீரே அரணாயுள்ளீர்

நெருக்கடியில் எனக்கு நீரே அடைக்கலமானீர்


1. எனக்கு வலிமையானவரே உமக்குப் புகழ் பாடுவேன்

ஏனெனில் என் அடைக்கலமும் அரணும் நீரே

என் இறைவனே என் தலைவனே

என் மீது இரக்கம் கொள்பவர் நீரே


2. எதிரிகள் மேல் வெற்றி கொண்டு எனக்கு மகிழ்ச்சி அருளினீர்

தீமைகள் செய்வோரில் நின்று விடுதலை தந்தீர்

என் இறைவனே என் தலைவனே

என் மீது இரக்கம் கொள்பவர் நீரே