தாய் என்னை மறந்தாலும் மறவாத தெய்வமே தெய்வமே தெய்வமே இயேசுவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தாய் என்னை மறந்தாலும் மறவாத தெய்வமே

தெய்வமே தெய்வமே இயேசுவே

நான் உன்னைப் பிரிந்தாலும் பிரியாத நண்பனே

நண்பனே நண்பனே இயேசுவே

உன்னைப் பாடப் பாட உள்ளம் கொள்ளை கொள்ளுதே

உன்னில் சேர சேர நெஞ்சம் ஏங்குதே


1. துன்ப துயரங்கள் சூழ்ந்த போதிலும்

அச்சமில்லை அச்சமில்லையே

கொள்ளை நோய்களோ வந்த போதிலும்

அச்சமில்லை அச்சமில்லையே

என்னோடு இருப்பதால் எனக்கு என்றும் பயமில்லை

உன் தோளில் சுமப்பதால் கலக்கமில்லையே

நான் உன்னை மறக்கலாம் நீ என்னை மறவாயோ


2. சொந்த பந்தங்கள் மறந்து போகலாம்

அச்சமில்லை அச்சமில்லையே

சுற்றம் சூழலும் பிரிந்து போகலாம்

அச்சமில்லை அச்சமில்லையே