இறைவா என்னோடு பேசிட வா - என் இதயம் மகிழ்ந்திட வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவா என்னோடு பேசிட வா - என்

இதயம் மகிழ்ந்திட வா

உனக்காய் நான் என்றும் காத்திருப்பேன்

உனைப் பாடி மகிழ்ந்திருப்பேன்


1. கரங்களில் என்னைப் பொறித்தாய்

கண்ணின் மணியாய் காத்தாய்

மகனாய் மகளாய் ஏற்றாய்

மனதினில் அமைதியைத் தந்தாய்

என்னில் வந்த சொந்தமாய் நின்றாய்

உன்னில் என்னை இணைத்திட வந்தாய்

வருவாய் வருவாய் வருவாய் வரம் தருவாய்


2. விழியினில் நிலவாய் வந்தாய்

மார்பினில் சுடராய் நின்றாய்

உறவாய் எனை நீ அணைத்தாய்

உயிராய் எனை நீ இணைத்தாய்

விண்ணில் என்னை இணைத்திட வந்தாய்

மண்ணில் பல விந்தைகளைப் புரிந்தாய்