உன் பாதம் சரணாகின்றேன் உனில் வாழும் நினைவாகின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன் பாதம் சரணாகின்றேன்

உனில் வாழும் நினைவாகின்றேன்

உனைப் பிரியா உறவாகின்றேன்

உனைச் சேரும் உயிராகின்றேன்


1. இமையாக எனை நீ காத்தாய்

இருள் போகும் வாழ்வு மகிழ்வாகும்

இறவாதது உன் இரக்கந்தான்

நிஜமானது உன் பேரன்புதான் இயேசய்யா இயேசய்யா

கருவிலேக் காத்திடும் உன் அன்புக்கரம் கண்டு

களிப்புடன் வாழ்ந்திட கடவுளே சரணம்


2. கடல் தேடும் நதி நானாக

நிலம் தேடும் மழை நீயாக

உடன் வாழ்வது உன் அன்புதான்

உயிர் ஈவதும் உன் பண்புதான் இயேசய்யா இயேசய்யா

கடலினில் நதியினில் நிலத்தினில் மழையினில்

தேடலின் இறைவனே நானுனைக் கண்டிட