உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் - என் உள்ளத்தில் உறைந்திட வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் - என்

உள்ளத்தில் உறைந்திட வா

உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் - என்

உயிரினில் கலந்திட வா

வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே


1. உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா

வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா

நீதியும் நேர்மையும் மறைந்தாலும்

உரிமையை மனிதம் இழந்தாலும்

உண்மையை உரைத்திட வா என்னில்

உறவை வளர்த்திட வா


2. பிரிவுகள் என்னைப் பிரித்தாலும் பரிவாய் என்னில் வா

அன்பையே நானும் மறந்தாலும் அன்பாய் என்னில் வா

வாள்களும் போர்களும் அழித்தாலும்

வாழ்வினை வாழ்வே எரித்தாலும்

வாழ்வின் ஊற்றே வா எந்தன் வாழ்வின் நிறைவாய் வா