என் இயேசு தந்த இந்த அன்பான விருந்து என் வாழ்வின் அருமருந்து

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் இயேசு தந்த இந்த அன்பான விருந்து

என் வாழ்வின் அருமருந்து

இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்றார் இயேசு


1. உயிரினை அளித்திடும் திருவுடலாம்

உறவினை வளர்த்திடும் இறையுடலாம்

பிணிகளை நீக்கிடும் கனிகளைக் கொடுத்திடும்

மாபரன் இயேசுவின் உயிருடலாம்

அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் என்றே

அன்புடன் அழைக்கின்றார் இயேசு இயேசு


2. பாவங்கள் கழுவிடும் திரு இரத்தமாம்

பரகதி சேர்த்திடும் இறை இரத்தமாம்

அன்பிலும் பண்பிலும் அருளிலும் வளர்த்திடும்

ஆண்டவர் இயேசுவின் திரு இரத்தமாம்

அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் என்றே

அன்புடன் அழைக்கின்றார் இயேசு இயேசு