உனை நாடி நாடி வரும் நேரம் உயிர் நாடி உருகிப் பாடும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உனை நாடி நாடி வரும் நேரம்

உயிர் நாடி உருகிப் பாடும்

சொந்தம் தேடித் தேடி வரும் வேளை

சொல்லாமல் சோகம் போகும்

உன்னில் என்னை என்னில் உன்னை

என்றும் அன்பில் ஒன்றி வாழ

வாழ்த்தும் உந்தன் வார்த்தை


1. வாழ்வின் ஒளி உன் வார்த்தை

வழியை விலக விழுந்தேன்

வாழ்வே உன்னில் சரணாக

வரங்கள் சுரந்தாய் மழையாக

வானம் போன்ற உந்தன் அன்பில்

வாழும் ஜீவன் நான் - உன்

வள்ளல் உள்ளம் சொல்லும்

வார்த்தை வளமை தந்ததே ஆ


2. தனிமை இருளின் சிறையில்

தவித்து என்னை இழந்தேன்

இறையே உன்னை உயிராக

இதயம் தந்தாய் உணர்வாக

எந்தன் வாழ்வு உந்தன் உறவில்

சொந்தம் காண்கிறதே

என் நெஞ்சில் என்றும்

சந்தோஷம்தான் சந்தோஷம்தானே ஆ