குதூகலமாக நன்றியின் காணிக்கை தந்தோம் திருக்குலமாக எம்மையே மீட்ட தேவனுக்கே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


குதூகலமாக நன்றியின் காணிக்கை தந்தோம்

திருக்குலமாக எம்மையே மீட்ட தேவனுக்கே


1. விடுதலையின் அப்பமாம் இயேசுவிலே

வீறு தரும் அப்பமாம் அவர் அன்பினிலே

எம் உழைப்பு தந்த பலனை இதய நன்றிக் கனியை

தந்து பணிந்திடுவோம் தந்தாய் ஏற்றருள்வீர்


2. உலகினரை மதித்திடும் புன்னகையை

உடைந்தோரைத் தேற்றிடும் நல்ல வார்த்தைகளை

உம் பிள்ளைகளாய் வாழ விரும்பும் எங்கள் மனதை

தந்து பணிந்திடுவோம் தந்தாய் ஏற்றருள்வீர்